மருமகளை மகளாக பார்த்த பாக்கியராஜ்... மருமகளின் கண்கலங்க வைத்த பதிவு
நடிகர் பாக்கியராஜ் மறைந்து சில வாரங்களே ஆன நிலையில், அவரது மருமகள் வெளியிட்டுள்ள இன்ஸ்டா பதிவு கண்கலங்க வைத்துள்ளது.
நடிகர் பாக்கியராஜ்
தமிழ் சினிமாவில் திரைக்கதை மன்னன், நடிகர், கதாசிரியர் பல பன்முக திறமை கொண்ட பாக்கியராஜ் சில வாரத்திற்கு முன்பு மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார்.
இவரது மறைவினால் ஒட்டுமொத்த ரசிகர்கள், திரைத்துறையினர், பிரபலங்கள் இன்னும் மீளா துயரில் இருந்துவரும் நிலையில், அவரது மருமகளும், தொகுப்பாளருமான கிகி என்ற கீர்த்தி இன்ஸ்டா பதிவு ஒன்றினை பதிவிட்டுள்ளது நெிகழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மருமகளின் பதிவு
கிகி தனது இன்ஸ்டாவில் இரண்டு புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். முதல் புகைப்படத்தில் மாமனார் பாக்கியராஜ், மாமியார் கணவருடன் மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படம் ஒன்றையும், மற்றொரு புகைப்படம் மாலை அணிவிக்கப்பட்ட பாக்கியராஜின் உருவப்படம் முன்பு மலர்தூவி மரியாதை செலுத்துவதையும் பகிர்ந்துள்ளார்.
மேலும் இந்த புகைப்படத்துடன் Miss You Appa என்றும் பாக்கியராஜின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டா பக்கத்தையும் டேக் செய்துள்ளார்.

மருமகளின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் மறக்க முடியாத கலைஞர், மிஸ் யூ சார் என்று ஆறுதலாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
பாக்கியராஜ் மருமகள் கிகியை தனது சொந்த மகளாகவே பார்த்து வந்தது குறிப்பிடத்தக்கது. சாந்தனுவின் காதல் விவகாரம் வெளியே தெரிந்து சர்ச்சையை ஏற்படுத்திய போது பாக்கியராஜ் ஊடகத்திற்கு கடிதம் ஒன்றினை எழுதினார்.
அதாவது தனது மகனுக்கும், தொகுப்பாளர் கீர்த்திக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளதாகவும், முறையான அழைப்பிதழ் பின்பு உங்களுக்கு வழக்குவதாகவும், இதனை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.
பாக்கியராஜின் இந்த எளிமை மற்றும் வெளிப்படை தன்மை ரசிகர்களின் பாராட்டை தற்போதும் பெற்று வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |