அனைவரிடமும் மண்டியிட்டு மன்னிப்பு கேட்கிறேன்... நடிகர் ரவி மோகனின் எமோஷனல் பேச்சு
நடிகர் ரவி மோகன் விருது வழங்கும் விழா ஒன்றில் பங்கேற்ற போது ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டது சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
நடிகர் ரவிமோகன்
நடிகர் ரவி மோகன் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வந்த நிலையில், தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தற்போது சினிமாவில் நடிப்பதில்லை என்று கூறியுள்ளார்.
ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியிடமிருந்து விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
மனு நிலுவையில் உள்ள போது தனது தோழியான கெனிஷாவுடன் ஒன்றாக பல நிகழ்வுகளில் கலந்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் இருவரும் காதலிப்பதாகவும் பேசப்பட்டு வந்தது.

அண்மையில் கெனிஷா ரவி மோகனை விட்டு பிரிந்துவிட்டார். தனது இக்கட்டான சூழ்நிலையில் தோழியாக அருகில் இருந்த கெனிஷா சென்றது ரவி மோகனை பெரும் அதிருப்தியில் ஆழ்த்தியது.
தன்னுடைய திருமண வழக்கையை விவாகரத்து பெறாமல் நான் சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று கூறி ஆன்மீக பாதையில் சென்றார்.

மன்னிப்பு கேட்ட ரவி மோகன்
இந்நிலையில் அண்மையில் நடந்த விருது வழங்கும் விழாவில் பேசிய ரவி மோகன், தனக்கு 46 வயது ஆக போகின்றது. அதில் 23 வருடம் சினிமாவில் இருந்திருக்கிறேன்.
அவ்வாறு இருக்கையில், தான் செய்த சிறிய தவறு உங்களை காயப்படுத்தியுள்ளது. தனிப்பட்ட வாழ்க்கை, சினிமா வாழ்க்கை 50-50 சதவீதமாக இருக்கும்போது, தான் அவ்வாறு எமோஷனலாக பேசிவிட்டதாக கூறியுள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், நீ எத வேணா சொல்லு நாங்க ஒத்துக்குறோம், ஆனால் சினிமாவில் இருக்க மாட்டேன் என்பதை மட்டும் நீ சொல்லக்கூடாது என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அவர்கள் கூறியுள்ளதை வேதவாக்காக எடுத்துக் கொண்டு, அனைவரது முன்னிலையிலும் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டுக் கொள்கின்றேன் என்றும் தன்னை விரும்பும் ரசிகர்களுக்கு எப்பொழுதும் துரோகம் செய்ய மாட்டேன் ....
திரும்பி வருவேன்... வந்து கொண்டிருக்கிறேன்... கராத்தே பாபுவாக திரும்பிவருவேன், தனக்கு நம்பிக்கை கொடுத்தவர்களுக்கு நன்றி என்றும் நான் சிரித்துக் கொண்டு சந்தோஷமாக இருப்பதற்கு காரணம் என் ரசிகர்கள் தான் என்று கூறியுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |