சீரியல் நடிகரை ஏமாற்றி பணம் பறித்த நபர்- வேதனையுடன் வெளியிட்ட காணொளி
சின்னத்திரை நடிகர் செந்தில் பணம் ஏமாந்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் காணொளியொன்றை பகிர்ந்துள்ளார்.
நடிகர் செந்தில்
சின்னத்திரை நடிகர்களில் பிரபலமாக இருப்பவர் தான் நடிகர் செந்தில்.
இவர், சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட தொடர்களில் நடித்திருக்கிறார்.
இதற்கிடையில் சரவணன் மீனாட்சி தொடரில் அவருக்கு ஜோடியாக நடித்த ஸ்ரீஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இருவரும் இணைந்து பிசினஸ் செய்து வருகிறார்கள்.
இதனை தொடர்ந்து, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அண்ணா என்ற சீரியலில் நடித்து வருகிறார்.
சைபர் க்ரைமில் பணம் இழந்த செந்தில்
இந்த நிலையில், நடிகர் செந்தில் சைபர் க்ரைமில் பணம் இழந்துவிட்டதாக காணொளியொன்றை பகிர்ந்துள்ளார். அதில், “ எனக்கு தெரிந்த நபர் ஒருவர் வாட்சப் நம்பரில் இருந்து 15 ஆயிரம் பணம் கேட்டு செய்தியொன்று வந்தது. நான் ட்ரைவிங்கில் இருந்த நிலையில் அவர் சொன்ன நம்பருக்கு பணம் அனுப்பிவிட்டேன்.
அதன் பிறகு கணக்கு விவரங்களை பார்த்தால் வேறொருவர் பெயர் அதில் இருந்தது. அது பற்றி போன் செய்து கேட்ட போது, அவர் தனது வாட்சப் ஹேக் ஆகிவிட்டது என்ற தகவலை கூறினார். இது போன்று 500 பேர் இன்று காலை முதல் அழைப்பு வந்து விட்டது.
இது தொடர்பான முறைபாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன எனக் கூறினார். அப்போது தான் நான் சைபர் க்ரைமில் பணத்தை இழந்துவிட்டேன் என்பதை புரிந்து கொண்டேன். உடனே சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்து இருக்கிறேன்.” எனக் பேசியுள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |