வீட்டிலேயே புதினா செடி வளர்ப்பது எப்படி?
சமையலில் மணத்திற்காக பயன்படுத்தப்படும் புதினா கீரையில், ஏராளமான மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளது.
இதில் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, கார்போஹைடிரேட், நார்ப்பொருள் உலோகச்சத்துக்கள், பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, நிக்கோட்டினிக் ஆசிட், ரிபோ மினேவின், தயாமின் ஆகிய சத்துக்களும் அடங்கியுள்ளன.
இதனை சட்னி அல்லது சாறாக எடுத்து பருகினாலும் மருத்துவ குணங்கள் மாறுவதில்லை என்பது புதினாவின் சிறப்பம்சம் ஆகும்.
நாம் ஒவ்வொரு முறை சாப்பிட்ட பிறகும், சிறிது புதினா இலைகளை வாயில் போட்டு நன்கு மென்று தின்பதால் வாய் துர்நாற்றம் நீங்குகிறது.
புதினாவை துவையல் செய்து சாதத்துடன் சாப்பிட்டு வர வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, செரிமானமின்மை ஆகியன தீரும்.
புதினா கீரையை நீர் விடாமல் அரைத்து வெளி உபயோகமாகப் பற்றுப் போட்டால், தசைவலி, நரம்புவலி, கீல்வாத வலிகளின் வேதனை குறையும்.
ஆஸ்துமா நோயாளிகளுக்கு புதினா நல்லது என்றாலும் அளவோடு எடுத்துக் கொள்ளலாம்.
இத்தகைய பல நன்மைகளை கொண்ட புதினாவை வீட்டிலேயே வளர்ப்பது எப்படி என தெரிந்து கொள்ளலாம்.
வீட்டிலேயே வளர்ப்பது எப்படி?
தடிமனான, குறைந்தபட்சம் இரண்டாகக் கிளைத்திருக்கும் புதினா தண்டை எடுத்துக் கொள்ளவும்.
அதில் இலைகள் அனைத்தையும் நீக்காமல், மேலே இரண்டு இலைகளை விடவும்.
ஒரு கண்ணாடி டம்ளரில் பாதியளவு நீர் எடுத்துக் கொண்டு, அதில் புதினா தண்டுகளை வைக்கவும்.
டம்ளரில் நீரை இரண்டு நாட்களுக்கு ஒருமுறை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும்.
டம்ளரை வெயிலில் வைக்கவே கூடாது, புதினா தண்டுகள் ஐந்து நாட்களுக்கு பின் வேர் விட தொடங்கும்.
மேலே இருந்த இரண்ட இலைகளுடன் இன்னும் சில இலைகள் வரள ஆரம்பிக்கும்.
இப்போது இந்த தண்டை எடுத்து மண்ணில் நட வேண்டும், புதினா படர்ந்து வளரக்கூடிய செடி என்பதால் அகலமான தொட்டிகளில் வைக்கவும்.
தொட்டி மேல் லேசாகத்தான் சூரியஒளி பட வேண்டும், 10 முதல் 15 நாட்களில் புதினா வளர்ந்துவிடும்.