முதலமைச்சர் விஜய்யிடம் நடிகர் கேட்ட உதவி! தவெக அமைச்சர் செய்த வேலை
90-ஸ் களின் மிகவும் பிரபலமான காமெடி நடிகரான பாவா லட்சுமணன் கேட்ட உதவியை தவெக அமைச்சர் தற்போது நிறைவேற்றி உள்ளார்.

பாபா லட்சுமணன்
'மாயி' படத்தில் வடிவேலுவுடன் மிகவும் நகைச்சுவையாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான்பாவா லட்சுமணன். 90-ஸ் களின் மிகவும் பிரபலமான காமெடி நடிகராக வலம் வந்தார். சமீப காலமாக இவரை திரைப்படங்களில் பார்ப்பதே மிகவும் அரிதாக இருந்து. இப்படி இருக்க அண்மையில் ஒரு பேட்டியில் அவர் ஒரு விபத்தில் தன்னுடைய கால் விரல்களை இழந்ததாகவும் தனக்கு இருக்க ஒரு விடு இல்லாமல் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் இதற்கு ஏதாவது உதவி செய்ய வேண்டியும் முதலமைச்சர் விஜய்யிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கு தற்போது தவெக அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

அமைச்சர் ராஜ் மோகன்
நடிகர் பாவா லட்சுமணனின் இந்த இக்கட்டான சூழ்நிலையை அறிந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அவருக்கு உதவ முன்வந்துள்ளார். சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த அரசு எம்.எல்.ஏ., குடியிருப்புக்கான வீட்டை, தங்குவதற்கு இடமின்றித் தவித்த பாவா லட்சுமணனுக்கு கொடுத்து உதவி உள்ளார். இன்னும் ஆறு மாத காலத்திற்கு நீங்கள் இந்த வீட்டிலேயே தங்கி உங்களது உடல்நலனைக் கவனித்துக் கொள்ளுங்கள். அதற்குள் உங்களுக்கு நிரந்தரமாகச் சொந்த வீடு ஒன்றினை ஏற்பாடு செய்து தருகிறேன்" என உறுதியளித்துள்ளார். அமைச்சர் ராஜ்மோகனின் இந்த செயல் தற்போது இணையத்தை ஈர்த்து கருத்துக்களை பெற்று வருகிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |