த்ரிஷா வளர்க்கும் பிரியமான நாய் 'இஸ்ஸி'! இது யார் கொடுத்தது? வெளியான இரகசியம்
நடிகை த்ரிஷா பிரியமாக வளர்க்கும் நாய் பற்றி தற்போது ஒரு இரகசியத்தகவல் கிடைத்துள்ளது. த்ரிஷாவிற்கு தற்போது 43 வயதாகிறது.

ஆனால் அவர் இன்னும் முன்னணி நடிகையாக தான் வலம் வருகிறார். ரசிகர்கள் மத்தியில் த்ரிஷாவிற்கு எவ்வளவிற்கு எவ்வளவு அதே அளவிற்கு சர்ச்சையும் இருக்கிறது.
நடிகை த்ரிஷாவிற்கு நாய்கள் என்றால் மிகவும் பிடிக்கும். இந்த நிலையில் அவர் சோரோ என்ற நாயை மிகவும் பிரியத்துடன் வளர்த்து வந்துள்ளார். அந்த நாய் எதிர்பாராத விதமாக இறந்துள்ளது. இதனை நடிகை த்ரஷாவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. 2024ம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு த்ரிஷாவின் வீட்டில் நடந்த எதிர்பாராத அதிர்ச்சி சம்பவத்தில் அவர் ஆசையாக வளர்த்து வந்த நாய் இறந்தது.

அந்த சோரோ என்ற நாயை த்ரிஷா தனது மகனை போல வளர்த்து வந்துள்ளார். தன்னை அறிந்த அனைவருக்கும் தனது வாழ்க்கை இனி பொருளற்றதாகிவிட்டது என்பது தெரியும்" என்று குறிப்பிட்டு நாய்க்குட்டியை பிரிந்த சோகத்தை வெளிப்படுத்தி இருந்தார் நடிகை த்ரிஷா.இப்படி இருக்க நடிகை த்ரிஷா இப்போது வளர்க்கும் நாய்க்குட்டியின் பெயர் இஸ்ஸி.
இந்த நாய்க்குட்டிக்கு இஸ்ஸி கிருஷ்ணன் எனப் பெயர் சூட்டி அதற்கென தனி இன்ஸ்டா பக்கம் ஓபன் செய்து தன்னுடைய நாய் சம்பந்தமான பதிவுகளை பதிவிட்டு வருகிறார் த்ரிஷா.இப்படி இருக்க த்ரிஷாவின் இஸ்ஸி நாய் பற்றிய இரகசிய தகவலை நடிகர் விஸ்னு விஷால் குறிப்பிட்டுளாளர்.

'கட்டா குஸ்தி 2' படத்திற்கான புரோமோஷன் பேட்டிகளில் கலந்துகொண்ட நடிகர் விஸ்னு விஷால் அண்மையில் அளித்த பேட்டியில், "இதை நான் இதுவரை எங்கும் சொன்னதில்லை.இது ஒரு சிறப்பான விஷயம். தற்போது த்ரிஷாவிடம் இருக்கும் நாய் இஸ்ஸி, என்னுடைய 'டெடி' (Teddy) என்ற நாயின் குட்டிதான். அது ஒரு 'பூடில்' (Poodle) வகை நாய்." என்று கூறியிருக்கிறார்.மேலும், "என் மனைவியும் த்ரிஷாவும் நெருங்கிய தோழிகள். அவர்கள் அடிக்கடி நாய்களைப் பற்றிப் பேசிக்கொள்வார்கள். த்ரிஷாவின் நாயைப் பற்றிய இந்தத் தகவலை நான் பகிர்ந்துகொண்டதை அவர் தவறாக எடுத்துக்கொள்ளமாட்டார் என்று நம்புகிறேன்." என கூறி இருந்தார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |