சனி பெயர்ச்சியால் 4 ராசிகளுக்கு பொற்காலம்! கோடியில் புரளப்போகும் ராசிகள்
சனி பகவான் இன்று நட்சத்திர பெயர்ச்சி அடைகிறார். சனியின் ஒவ்வொரு அசைவும் அனைத்து இராகளுக்கும் தாக்கத்தை உண்டாக்கும்.

ஜோதிட ரீதியாக ஒன்பது கிரகங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாக சனி பகவான். சனி பகவானின் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இப்படி இருக்க ஜூலை 2ஆம் தேதி சனி பகவான் ரேவதி நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி அடைகிறார். இந்த நட்சத்திரப் பெயர்ச்சியால் 12 ராசிகளிலும் தாக்கம் இருந்தாலும், சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம், தொழில் முன்னேற்றம், பணவரவு மற்றும் நல்ல பலன்கள் கிடைக்கும் என ஜோதிடக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

ரிஷபம்
சனியின் நட்சத்திரப் பெயர்ச்சியால் சிறுசிறு பிரச்சினைகள் நீங்கி, கடின உழைப்புக்கு உரிய பலன் கிடைக்கும். நீண்டநாள் நிலுவைப் பணிகள் வெற்றிகரமாக முடியும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். ஜூலை 2க்குப் பிறகு நினைத்த காரியங்கள் சாதகமாக நிறைவேறும். மாணவர்களுக்கு கல்வி முன்னேற்றம், வெளிநாட்டு வாய்ப்பு மற்றும் திருமணத் தடைகள் நீங்கும் வாய்ப்பு உள்ளது.

கடகம்
சனியின் நட்சத்திரப் பெயர்ச்சியால் அதிர்ஷ்டமும் செல்வமும் அதிகரிக்கும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். பணியிடத்தில் புதிய பொறுப்புகள், பதவி உயர்வு மற்றும் முன்னேற்ற வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் நிதி ஆதாயம், எதிர்பாராத வெற்றி மற்றும் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சிறுசிறு பிரச்சினைகள் நீங்கி, உடன்பிறந்தவர்களின் ஆதரவுடன் திட்டமிட்ட பணிகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.

விருச்சிகம்
சனியின் நட்சத்திரப் பெயர்ச்சியால் நிதிநிலை மேம்பட்டு, பழைய முதலீடுகளில் இருந்து எதிர்பாராத லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கடின உழைப்புக்கு முழு பலன் கிடைப்பதுடன், சொத்து தொடர்பான பிரச்சினைகள் சாதகமாக தீரும். உடன்பிறந்தவர்களின் நிதி ஆதரவு கிடைக்கும். பழைய கடன்கள் அடைந்து, எதிர்பாராத நேரத்தில் வெற்றி மற்றும் அதிர்ஷ்டம் கைகூடும்.

மகரம்
சனியின் நட்சத்திரப் பெயர்ச்சியால் வெற்றி, அதிர்ஷ்டம், தொழில் முன்னேற்றம் மற்றும் வருமான உயர்வு கிடைக்கும். வேலை மாற்றம், வெளிநாட்டு வாய்ப்பு, புதிய தொழில் தொடங்குதல் ஆகியவற்றுக்கு நல்ல காலம். வீடு, சொத்து வாங்கும் யோகம் அமையும். கூட்டுத் தொழில் பிரச்சினைகள் நீங்கி, திருமணத் தடைகளும் விலகும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).