இரவில் பால் அருந்துவது நல்லதா? கெட்டதா?
சிலருக்கு உறங்கச் செல்வதற்கு முன் நிச்சயம் ஒரு க்ளாஸ் பால் குடித்தாக வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு உறக்கம் வரும். உண்மையில் கூறப்போனால் ஒருவருக்கு 8-10 மணிநேர உறக்கம் நிச்சயம் தேவை.
ஏனெனில் உறக்கம் இருந்தால்தான் மன அழுத்தம், இதயப் பிரச்சினை போன்ற பிரச்சினைகள் ஏற்படாது.
image - Man metters
ஆனால், படுக்கைக்குச் செல்லும் முன்னர் பால் குடிப்பது தீங்கு விளைவிக்கும் என்று பல ஆய்வுகளில் கூறப்படுகின்றது.
இரவு நேரங்களில் பால் குடிக்கும் பழக்கம் இருப்பதால் நித்திரை சரியாக வராது. வயிற்று வலி வர வாய்ப்பிருக்கிறது. அதற்கான காரணம் என்னவென்றால், பாலில் இருக்கும் லக்டோஸ் தான்.
image - HBF
இது வீக்கம், பிடிப்புக்கள் போன்ற செரிமான பிரச்சினைகளை அதிகரிக்கின்றது. சர்க்கரை நோயாளிகள் பாலை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் பாலில் சர்க்கரை சேர்க்கும் பொழுது அது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை உடனடியாக கட்டுப்படுத்துகிறது.
இரவில் உணவைத் தவிர்த்து பால் அருந்தினால் உடல் எடையைக் குறைத்துவிடலாம் என்று பலர் நினைப்பதுண்டு. உண்மையில் இரவில் பால் குடிப்பது உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.
அதுமட்டுமில்லாமல் பால் குடித்தவுடன் உறங்குவது செரிமானத்தை கடினமாக்குகிறது.
Image - Brokerage Dairy Products