ஆண்களே சிங்கிளாவே இருங்க...நன்மைகள் அதிகமாம்!
சிங்கிளாக இருப்பது பலருக்கு பெருமையாக இருந்தாலும் ஒரு சிலருக்கு அது மிகவும் வேதனையளிப்பதா இருக்கிறது.
துணையுடன் இருப்பவர்களுக்கு சிங்கிளாக இருப்பவர்களைப் பார்த்தால் ஒருவித பரிதாப உணர்வு ஏற்படும். ஆனால், உண்மையில் சிங்கிளாக இருப்பது பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும்.
ஒரு மனிதன் எப்பொழுதும் தனியாகவே வாழ்ந்துவிட முடியாது. நிச்சயம் அவனுக்கொரு துணை வேண்டும். ஆனால், அந்த துணை கண்டிப்பாக காதல் துணையாகத்தான் இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. அது நண்பர்களாகவோ அல்லது குடும்பத்தினராகவோ கூட இருக்கலாம்.
காதல் துணை இல்லாமல் சிங்கிளாக இருப்பவர்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சிறந்ததொரு உறவை வைத்திப்பார்கள் என்று சமீபத்திய ஆய்வு கூறுகிறது.
இனி சிங்கிளாக இருப்பதில் என்ன நன்மைகள் இருக்கின்றது எனப் பார்ப்போம்.
மகிழ்ச்சியாக இருப்பார்கள்
சிங்கிளாக இருக்கும்போது மிகவும் வெளிப்படையானவர்களாக இருக்கின்றார்கள். அதுமாத்திரமின்றி தனது இலக்குகளில் கவனம் செலுத்த அதிக நேரத்தை செலவிட முடிகிறது. இதனால் மகிழ்ச்சி அதிகரிக்கிறது.
நித்திரை
ஒரு உறவில் இருக்கும்பொழுதும் நிச்சயம் அவர்களுடன் தொலைபேசியில் உரையாடுவதிலோ அல்லது குறுஞ்செய்தி அனுப்புவதிலோ நேரத்தை செலவிட வேண்டியிருக்கும். ஆனால், சிங்கிளாக இருக்கும்பட்சத்தில் அவையெல்லாம் தேவைப்படாது.
நேர காலத்துடன் உறங்கிவிடலாம். ஏனென்றால் உறக்கம் நம் சுகாதாரத்துடன் அதிக தொடர்புடையது.
உங்களுக்கான நேரம்
ஒரு உறவில் இருக்கும்பொழுது துணையை சந்தோஷப்படுத்துவதற்கு ஒவ்வொரு விடயத்தையும் பார்த்து பார்த்து செய்ய வேண்டியுள்ளது. அவர்களுக்காக அதிக நேரத்தை ஒதுக்க வேண்டியுள்ளது. இதில் தனக்காக நேரம் செலவிடுவது மிகவும் குறைந்துவிடுகிறது.
இதே சிங்கிளாக இருக்கும்பட்சத்தில் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப வேலை செய்யலாம்.
குறைந்தளவு மன அழுத்தம்
மன அழுத்தம் ஏற்பட பல காரணங்கள் இருக்கும் பட்சத்தில் அதில் முக்கியமானது, துணையுடன் ஏற்படும் பிரச்சினைகளால் வரும் மன அழுத்தம்.
அதாவது குறைவான சம்பளத்தை பெறும் நபரொருவர் தனக்கு மாத்திரம் அந்த பணத்தை செலவிட முடியும். அப்படியில்லாமல் தனது துணைக்கும் சேர்த்து அந்த பணத்தை செலவிட நினைத்தால் அது ஒரு வகையில் மன அழுத்தத்துக்கு இட்டுச் செல்லும்.
அதிகமான உடற்பயிற்சி
சிங்கிளாக இருக்கும் ஆண்கள் தங்கள் உடல் கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும் என்பதிலும் கூட்டத்தில் தான் அழகாகவும் தனித்துவமாகவும் இருக்கவேண்டும் என்பதற்காகவும் அதிகமாக சிரமப்படுகிறார்கள். சிங்கிளாக இருப்பவர்கள் ஜிம்மில் சேரும் விகிதம் அதிகமாக இருப்பதாக சமீபத்திய ஆய்வு கூறுகின்றது.