சூடான சாதத்துடன் சம்பார் பொடியில்லாமல் சாம்பார்! எப்படி செய்றாங்க பாருங்க
பொதுவாக அநேகமான வீடுகளில் ஒரு ஆள் சரி சாம்பார் பிரியராக இருப்பார்கள்.
இதற்கு முக்கிய காரணம் சாம்பாரின் சுவை தான். சம்பாருக்கு சுவை வேண்டும் என்பதற்காக சாம்பார் பொடி சேர்ப்பார்கள்.
ஒரு நாள் சம்பார் பொடி இல்லாமலாகி விட்டால் என்ன செய்வது என பயம் கொள்ள வேண்டாம்.
அந்த வகையில் சாம்பார் பொடியில்லாம் சாம்பார் பொடி சேர்த்த சுவைக்கு எப்படி சமைப்பது என்பதனை தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* வெந்தயம் - சிறிது
* கறிவேப்பிலை - சிறிது
* வரமிளகாய் - 5
* பச்சை மிளகாய் - 2
* கல் உப்பு - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 1/2 கப் (நறுக்கியது)
* தக்காளி - 2 (நறுக்கியது)
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
புளிச்சாறு செய்வதற்கு..
* புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
* தண்ணீர் - 1 கப்
பருப்பு வேக வைப்பதற்கு..
* துவரம் பருப்பு - 1/2 கப்
* தண்ணீர் - 2 கப்
சாம்பார் பொடியில்லாமல் சாம்பார் செய்வது எப்படி?
முதலில் சாம்பாரிற்கு தேவையான புளிக்கரைச்சல், பருப்பு ஆகியவற்றை தயார் செய்து எடுத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும், அதில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, வெந்தயம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
அத்துடன் வரமிளகாய் மற்றும் பச்சை மிளகாய் நறுக்கி சேர்க்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக வெந்தவுடன் தக்காளி, பெருங்காயத் தூள் மற்றும் மஞ்சள் தூளை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
பின்னர் புளிக்கரைச்சல் சேர்த்து சரியாக 5 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும்.
இதனை தொடர்ந்து மசித்து தனியாக வைத்த பருப்பை போட்டு கிளறி, சரியான அளவு உப்பு சேர்க்க வேண்டும்.
சரியாக 5 -7 நிமிடங்கள் வரை கொதிக்க விட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுவையான சாம்பார் தயார்!
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |