சுட சுட சாதத்திற்கு சூப்பரான முருங்கைக்காய் சாம்பார்! இதை மட்டும் சேர்த்துக்காதீங்க
பொதுவாக எமது வீடுகளிலுள்ள நிறைய பேருக்கு சாம்பார் இல்லையென்றால் சாப்பாடே இறங்காது.
இந்தியர்களின் சாப்பாட்டில் எது இல்லையென்றாலும் சாப்பிடுவார்கள். ஆனால் சாம்பார் இல்லாமல் சாப்பாடு என்றே ஒன்று இருக்காது.
காலையில் தோசை, இட்லி, ரொட்டி என அனைத்திற்கும் சூப்பராக செட்டாவது இந்த சாம்பார் தான்.
அந்த வகையில் முருங்கைகாயை வைத்து சூப்பரான முருங்கை காய் சாம்பார் எவ்வாறு செய்வது என்பது தொடர்பில் தொடர்ந்து பாரக்கலாம்.
தாளிக்க தேவையான பொருட்கள்
- எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
- கடுகு - 1 மேசைக்கரண்டி
- உளுந்தம் பருப்பு - 1/2 மேசைக்கரண்டி
- வெங்காயம் - சிறிது
- கறிவேப்பிலை - சிறிது
தேவையான பொருட்கள்
- பருப்பு - 100 கிராம்
- முருங்கைக்காய் துண்டுகள் - 8
- தக்காளி - 1
- பச்சை மிளகாய் - 1
- சின்ன வெங்காயம் - 3
- மிளகாய்த் தூள் - 1/2 மேசைக்கரண்டி
- மல்லித்தூள் - 2 மேசைக்கரண்டி
- சீரகத்தூள் - 1 மேசைக்கரண்டி
- மஞ்சள் தூள் - 1/2 மேசைக்கரண்டி
- புளி - நெல்லிக்காய் அளவு
- உப்பு - தேவையான அளவு
- மல்லித் தழை - தேவையானளவு
தயாரிப்பு முறை
முதலில் பருப்பை நன்கு கழுவி அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக வேக வைத்து எடுக்கவும். அத்துடன் மஞ்சள் தேவையென்றால் சேர்த்துக் கொள்ளலாம்.
பின்னர் சாம்பாருக்கு தேவையான காய்கறிகளை சுத்தம் செய்து, சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி வைத்து கொள்ளவும். இதனுடன் புளிக்கரைச்சலையும் தயார் செய்து கொள்ளவும்.
இதனை தொடர்ந்து புளி தண்ணீரை அடுப்பில் வைத்து அதில், முருங்கைக்காய், நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், தேவையானளவு உப்பு சேர்த்து மிதமான சூட்டில் வேக வைக்க வேண்டும்.
சுமாராக ஒரு 5 நிமிடங்களுக்கு பின்னர் கொதிக்க ஆரம்பிக்கும் அப்போது மிளகாய்த் தூள், மல்லித்தூள், சீரகத்தூள் சேர்த்து கொள்ளவும்.
கொதித்து கொண்டிருக்கும் போது மல்லிதழை, மற்றும் தாளிப்புக்கு கொடுக்கபட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்து இறக்கினால் சுவையான சாம்பார் தயார்!