Microsoft Windows பாதிக்கப்பட்டது ஏன்? இதனை சரிசெய்வது எப்படி?
உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான விண்டோஸ் கணினிகள் இன்று கடுமையான தொழில்நுட்ப சிக்கலை சந்தித்துள்ள நிலையில், இது எதனால் ஏற்பட்டது என்பதை தெரிந்து கொள்வோம்.
மைக்ரோசாப்ட்
இன்று Mircrosoft தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக, உலகெங்கும் உள்ள பல கணினிகளில், புளூ ஸ்கிரீன் ஆஃப் டெத் என்ற சிக்கல் வின்டோஸில் ஏற்பட்டது.
இந்த பிரச்சனையினால் பல நிறுவனங்கள், டேட்டா இழப்பு, விமான சேவை பாதிப்பு, வணிக நிறுவனங்கள் என்று அனைத்தும் பல பிரச்சனைகளை சந்திதுள்ளது.
சமீபத்திய Crowd Strike அப்டேட் காரணமாக இந்த பிழை ஏற்பட்டுள்ளதாக Microsoft Inc. மைக்ரோசாப்டின் சேவை மையம் அறிவித்துள்ளது.
க்ரோவ்ட் ஸ்ட்ரைக் இன்ஜினியரிங் (Crowd Strike Engineering) என்பது மைக்ரோசாப்ட் உடன் பணிபுரியும் சைபர் செக்யூரிட்டி சேவை நிறுவனம் ஆகும். பலருக்கு நீல நிற ஸ்க்ரீன் தெரிவதாக புகார் தெரிவித்துள்ள நிலையில், விண்டோஸ் பயனர்களுக்கு முக்கிய அறிவுரைகளை மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
தீர்வு என்ன?
விண்டோஸில் C:\Windows\System32\drivers\CrowdStrike கோப்பகத்திற்கு செல்லவும். C-00000291*.sys பொருந்தக்கூடிய கோப்பைக் கண்டறிந்து அதை நீக்கவும். ஹோஸ்டை சாதாரணமாக துவக்கவும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மைக்ரோசாப்ட் விண்டோஸ் முடக்கமானது உலகம் முழுவதும் முக்கிய செயல்பாடுகள் முடங்கியதுடன், தொழில்நுட்ப சவால்களை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |