செல்போனுக்கு வாரி இறைக்கும் இலங்கைவாசிகள்- மாதச் செலவு எவ்வளவு தெரியுமா?
செல்போனுக்கு மாதம் எவ்வளவு செலவு செய்கிறீர்கள் என்ற கேள்வியுடன் தொகுப்பாளினி ஒருவர் இலங்கை-கொழும்பு மக்களை சந்தித்துள்ளார்.
இலங்கை மட்டுமல்லாமல் உலகத்தில் உள்ள பலக்கோடி மக்களுக்கு செல்போன் இன்றியமையாத ஒன்றாக மாறியுள்ளது.
தேவைக்காக செல்போன் பயன்படுத்துவதிலும் பார்க்க கட்டாயம் செல்போன் பயன்படுத்த வேண்டும் என்ற ஒரு நிலைக்கு நாம் அனைவரும் வந்து விட்டோம்.
அந்த வகையில், “நீங்க மாதத்திற்கு செல்போனுக்காக எவ்வளவு செலவு செய்வீர்கள்?” என்ற கேள்வியுடன் தொகுப்பாளினியொருவர் இலங்கை- கொழும்புவாசிகளை சந்தித்திருந்தார்.
அதில், ஒருவர் மாதம் 7000 ரூபாய் செலவு செய்வதாகவும், மற்றொருவர் 2000 ரூபாய் வரை செலவு செய்வதாகும் கூறியுள்ளார்.
தற்போது இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியில் செல்போனுக்காக மாதம் 7000 செலவு செய்யும் மனிதர்களும் இருக்கிறார்கள் என்பது தெளிவாகியுள்ளது.
இது போன்று கொழும்பு மக்கள் செல்போனுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பதனை நகைச்சுவையுடன் காணொளியில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |