ஆகஸ்டில் சிம்ம ராசிக்குள் புதன் பெயர்ச்சி: உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார்?
ஜோதிட சாஸ்திரத்தில் நவகிரகங்களின் நிலைக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. கிரக நிலைகளில் ஏற்படுகின்ற சிறிய மாற்றங்கள் கூட 12 ராசிகளின் வாழ்க்கையிலும் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்ப்ப்படுகின்றது.
அந்த வகையில், புதன் மிகவும் சக்திவாய்ந்த கிரகமாகக் கருதப்படுகிறார். வணிகம், புத்திக்கூர்மை, பேச்சாற்றல் ஆகியவற்றின் அதிபதியான புதன், ஆகஸ்ட் மாதத்தில் சூரியன் ஆளும் சிம்ம ராசிக்குள் நுழைகிறார்.

இந்த கிரக மாற்றம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், சில ராசிக்காரர்களுக்கு கூடுதல் நன்மைகளை வழங்கும். அப்படி தனிப்பட்ட வாழ்க்கை, நிதி நிலை மற்றும் தொழில் ரீதியாக பலன் பெறும் 3 ராசிகள்.
மிதுனம்

மிதுன ராசியின் அதிபதி புதன் என்பதால், இந்த கிரகப் பெயர்ச்சி அவர்களுக்கு பல நல்ல மாற்றங்களை கொண்டு வரும்.
புதிய வருமான வாய்ப்புகள் உருவாகும். வேலை செய்து வருபவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்பும் அதிகம். வேலை மாற்றம் குறித்து யோசித்து வருபவர்கள், தங்கள் திறமைக்கும் தொழில் இலக்குகளுக்கும் பொருத்தமான புதிய வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.
உடன்பிறந்தவர்களுடன் உள்ள உறவு மேலும் வலுப்பெறும். அவர்களின் ஆதரவு தனிப்பட்ட வாழ்க்கையிலும், தொழில் தொடர்பான விஷயங்களிலும் உதவியாக இருக்கும்.தொழில் செய்து வருபவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
சிம்மம்

புதன் சிம்ம ராசிக்குள் நுழைவதால், இந்த ராசிக்காரர்களுக்கு பல நல்ல பலன்கள் கிடைக்கும். வெற்றியை நோக்கிய அவர்களின் பயணம் வேகமடையும்.
நிதி நிலைமை மேம்பட்டு, வாழ்க்கையின் பல துறைகளிலும் முன்னேற்றம் காண்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும், திருமண வாழ்க்கையில் அமைதியும் நிலவும். நீண்ட நாட்களாக நினைத்திருந்த ஆசைகள் நிறைவேறக்கூடிய நேரம் இது.
இதுவரை செய்த கடின உழைப்புக்கான பலன்களை அனுபவிப்பார்கள். திட்டமிட்ட பணிகள் அனைத்தும் சரியான நேரத்தில் நிறைவேறும்.
தனுசு

புதனின் இந்த ராசிப் பெயர்ச்சி, தனுசு ராசிக்காரர்களுக்கு முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியை அளிக்கும். அதிர்ஷ்டம் அவர்களுக்கு சாதகமாக அமையும்.
வேலை செய்து வருபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைத்து லாபம் அதிகரிக்கலாம்.
தொழிலை விரிவுபடுத்த விரும்புபவர்களுக்கு இது நல்ல காலமாக இருக்கும். தனிப்பட்ட மற்றும் தொழில்முறை பிரச்சனைகள் படிப்படியாக குறையும். இந்த காலத்தில் பெரிய அளவிலான உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பும் குறைவாக இருக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |