புதனின் நட்சத்திரப் பெயர்ச்சி: ஜாக்கிரதையாக இருக்கவேண்டிய டாப் 3 ராசிகள்!
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் நவகிரகங்களின் நிலையில் ஏற்படுகின்ற மாற்றங்களும் ஆற்றல் மிக்க கிரகங்களின் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகங்களும் 12 ராசிகளின் வாழ்க்கையிலும் நேரடியாக ஆதிக்கம் செலுத்தும் என நம்பபடுகின்றது.
அந்த வகையில், நவகிரகங்களில் இளவரசனாகக் கருதப்படும் புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக விளங்குகிறார். கன்னி மற்றும் மிதுன ராசிகளின் அதிபதியான புதன், சந்திரனுக்கு அடுத்தபடியாக குறுகிய காலத்தில் தனது நிலையில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியவர்.

தற்போது புதன் தனது சொந்த ராசியான கன்னியில் பயணித்து வருகிறார். செப்டம்பர் 21ஆம் தேதி சித்திரை நட்சத்திரத்தில் நுழைந்த புதன், அக்டோபர் 1ஆம் தேதி வரை அங்கு பயணிப்பார். சித்திரை நட்சத்திரத்தின் அதிபதி செவ்வாய் என்பதால், புதனின் இந்த நட்சத்திரப் பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தரக்கூடும்.
அதேவேளை, சில ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டிய சூழல் காணப்படுவதாக கணிக்கப்பட்டுள்ளது. அப்படி புதனின் நட்சத்திரப் பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என இந்த பதிவில் பார்க்கலாம்.
கன்னி

புதன் நட்சத்திரப் பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்கள் நிதி மற்றும் ஆரோக்கிய விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே வாக்குவாதங்கனை தவிர்ப்பது அவசியம்.
மருத்துவச் செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் எச்சரிக்கை அவசியம். பணிபுரிபவர்களுக்கு ஏற்ற இறக்கங்கள் நிறைந்த காலமாக இருக்கும். மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.
மகரம்

புதன் நட்சத்திரப் பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். குறிப்பாக தலைவலி, செரிமானப் பிரச்சனைகள் ஏற்பட அதிக வாய்ப்பு காணப்படுகின்றது.பேச்சில் நிதானம் தேவை.
கூட்டு தொழில் செய்பவர்கள் அவசர முடிவுகளைத் தவிர்க்க வேண்டும். வேலை தேடுபவர்களுக்கு விரும்பிய வேலை கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு மன வருத்தம் ஏற்படலாம்.
யாருக்கும் கடனாக பணம் கொடுப்பதைத் தவிர்க்கவும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடன் மோதல்களை தவிர்ப்பது நல்லது.
மீனம்

புதன் நட்சத்திரப் பெயர்ச்சியால் மீன ராசிக்காரர்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். பணியிடத்தில் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, அது வேலையை பாதிக்கலாம்.
கவனக்குறைவு மற்றும் அவசரத்தைத் தவிர்க்க வேண்டும். காதல் திருமணத்தில் தடைகள் ஏற்படலாம். பணம் சம்பாதிக்க அதிக முயற்சி தேவைப்படும்.
வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும் என்றாலும், புதனின் தாக்கம் தொழிலில் பாதிப்பை ஏற்படுத்தலாம். புதிய நட்புகள் மன அழுத்தத்தை அதிகரிக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |