ராகுவுடன் சந்திரன் சேர்க்கை: தொழில், நிதியில் சவால்களை சந்திக்கப் போகும் ராசிகள்!
ஜோதிடத்தில் கிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றுவதால், மற்ற கிரகங்களுடன் இணைந்து பல்வேறு சுப, அசுப யோகங்களை உருவாக்கி 12 ராசிகளின் வாழ்விலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் நவகிரகங்களில் நிழல் கிரகமாகக் கருதப்படும் ராகு, ஒரு ராசியில் சுமார் 18 மாதங்கள் வரை பயணிக்கக்கூடியவர்.

தற்போது ராகு கும்ப ராசியில் உள்ளார். மனதின் காரணியாகக் கருதப்படும் சந்திரன் குறுகிய காலத்தில் ராசியை மாற்றுவதால், பல்வேறு கிரகங்களுடன் இணைந்து யோகங்களை உருவாக்கும்.
அந்த வகையில், செப்டம்பர் 23-ம் தேதி சந்திரன் கும்ப ராசியில் நுழைந்து, அங்குள்ள ராகுவுடன் இணைவதால் அசுப யோகமான கிரகண யோகம் உருவாகவுள்ளது.
இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் தொழில் மற்றும் நிதி ரீதியாக சவால்களை சந்திக்க நேரிடலாம்.
அப்படி இன்று(செப்டம்பர் 23) தேதி உருவாகும் ராகு-சந்திர சேர்க்கையால் தொழில் மற்றும் நிதி விடயங்களில் கூடுதல் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
கடகம்

கடக ராசியின் 8-ஆவது வீட்டில் ராகு-சந்திர சேர்க்கை நிகழ்வதால், அடுத்த 2 நாட்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறிப்பாக நிதி விடயத்தில் எச்சரிக்கை அவசியம்.
எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கலாம். நற்பெயர் பாதிக்கப்படும் வாய்ப்பும் உள்ளது. தொழில் செய்பவர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.இல்லாவிட்டால் பெரிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.
கன்னி

கன்னி ராசியின் 6-ஆவது வீட்டில் ராகு-சந்திர சேர்க்கை நிகழ்வதால், எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பணியிடத்தில் பணிகளை கவனமாக செய்யாவிட்டால் பிரச்சனைகள் ஏற்படலாம்.
பண விஷயங்களில் அலட்சியத்தைத் தவிர்த்து, யாரையும் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். வியாபாரிகள் பணப் பரிவர்த்தனைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
மீனம்

மீன ராசியின் 12-ஆவது வீட்டில் ராகு-சந்திர சேர்க்கை நிகழ்வதால், எதிர்மறையான விளைவுகளை சந்திக்கும் வாய்ப்பு அதிகம். தொழில் புரியும் இடத்தில் வாக்குவாதங்களை தவிர்ப்பது அவசியம்.
நிதி இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால், பண விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். தொழிலில் கவனக்குறைவைத் தவிர்க்காவிட்டால் பெரிய பிரச்சனைகள் மற்றும் இழப்புகளை சந்திக்க நேரிடலாம். எனவே புதிய முதலீடுகளை செய்வதில் சற்று கவனம் தேவை.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |