அதிர்ஷ்டத்தின் கதவைத் திறக்கும் புதன் பெயர்ச்சி : இன்று முதல் உச்ச பலன்களை பெறும் 3 ராசிகள்!
ஜோதிடத்தில் நவகிரகங்களின் பெயர்ச்சி மனித வாழ்க்கையில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. அந்த வகையில் புத்திசாலித்தனம், பேச்சுத் திறன், கல்வி மற்றும் வியாபாரத்தின் காரகனான புதன், ஜூன் 22 ஆம் தேதி தனது சொந்த ராசியான மிதுனத்திலிருந்து கடக ராசிக்குள் நுழைந்துள்ளார்.
கடக ராசியில் ஏற்கனவே குரு மற்றும் சுக்கிரன் இருப்பதால், இந்த புதன் பெயர்ச்சி சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு தொழில், பணவரவு மற்றும் அதிர்ஷ்டத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கிடைக்கப்போகின்றது.
அப்படி இந்த புதன் பெயர்ச்சியால் அதிர்ஷ்ட மழையில் நனையப் போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்

புதன் பகவான் மேஷ ராசியின் 4-ஆம் வீட்டிற்கு பெயர்ச்சி அடைந்துள்ளார். இதனால் மேஷ ராசிக்காரர்களுக்கு புதிய வருமான வாய்ப்புகள் உருவாக வாய்ப்புள்ளது.
குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் அதிகரிக்கும். மன அழுத்தம் குறைந்து நிம்மதி கிடைக்கும். நீங்கள் செய்த கடின உழைப்பிற்கு உரிய பலன் கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் திறமைகள் பாராட்டப்படும்.
சமூகத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும். நீண்ட நாட்களாக முடிவடையாமல் இருந்த வேலைகள் படிப்படியாக நிறைவேறும். வீடு, நிலம் போன்ற சொத்து தொடர்பான விடயங்களிலும் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
கன்னி

புதன் பகவான் கன்னி ராசியின் 11-ஆம் வீட்டிற்கு சென்றுள்ளதால் பல நன்மைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடியும்.
வேலை பார்க்கும் நபர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் தீரும். உடல்நலம் வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். பொருளாதார நிலை வலுவடையும். சிக்கியிருந்த பணம் மீண்டும் கைக்கு வந்து சேரும். பல்வேறு வழிகளில் வருமானம் அதிகரிக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது.
விருச்சிகம்

புதன் பகவான் விருச்சிக ராசியின் 9-ஆம் வீட்டிற்கு பெயர்ச்சி அடைந்துள்ளார். இதனால் உங்கள் நிதி நிலைமை படிப்படியாக மேம்படும்.
முதலீடுகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். தொழில் மற்றும் பணியில் செய்த உழைப்பிற்கு நல்ல பலன் கிடைக்கும். வியாபாரிகள் எதிர்பார்த்த வருமானத்தை பெறுவார்கள்.
அதிர்ஷ்டம் சாதகமாக இருப்பதால் கடினமாக தோன்றிய காரியங்களும் எளிதாக நிறைவேறும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் காதல் மற்றும் நெருக்கம் அதிகரிக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |