முதல்வர் விஜய் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்லாத த்ரிஷா.. காரணம் என்ன?
நடிகர் த்ரிஷா முதல்வர் விஜய்யின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லாதது ஏன் என்ற கேள்வி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை த்ரிஷா
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் த்ரிஷா, நடிகர் விஜய்யின் பிறந்தநாளுக்கு ஒவ்வொரு வருடமும் வாழ்த்து தெரிவித்து வந்தார்.
விஜய் நடிகராக இருக்கும் போது் த்ரிஷாவுடன் பல படங்கள் சேர்ந்து நடித்த நிலையில், இதனால் சங்கீதா விவாகரத்து கேட்டதாகவும் கூறப்பட்டு வருகின்றது.

விஜய் சங்கீதா விவாகரத்து சர்ச்சை சென்று கொண்டிருந்த போது, த்ரிஷா அண்ணையில் நடைபெற்ற திருமண நிகழ்வில் ஒரே மாதிரியான உடையணிந்து விஜய்யுடன் வந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பின்பு விஜய் முதல்வராக பதவியேற்கும் நிகழ்விற்கும் வருகை தந்திருந்தார். இந்நிலையில் நேற்றைய தினம் முதல்வர் விஜய் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

வாழ்த்து கூறாத த்ரிஷா
முதல்வருக்கு தமிழக சட்டசபையிலும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்த மூன்று ஆண்டுகளாக த்ரிஷா விஜய்க்கு பிறந்தநாள் கூறிவந்த நிலையில், இந்த ஆண்டு எந்தவொரு வாழ்த்து பதிவும் வெளியிடவில்லை.
அதாவது 2023ம் ஆண்டு லியோ படத்தில் நடிக்கும் போது, அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தினை வெளியிட்டு முடிவில்லாத காதல் என்பதை குறிப்பிடும் எமோஜியுடன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

பின்பு 2024ம் ஆண்டில் லிப்ட் ஒன்றில் விஜய், த்ரிஷா இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டு, புணலுக்கு பின் அமைதி, அமைதிக்கு பின் புயல்! இன்னும் பல மைல்கற்கள் காத்திருக்கின்றத என்று அரசியல் பயணத்தை மறைமுகமாக குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்தார். இதிலும் அதே எமோஜியை பயன்படுத்தியுள்ளார்.

மேலும் 2025ல் த்ரிஷாவின் நாய் இஸ்ஸியை விஜய் கொஞ்சும் புகைப்படத்தினை பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் அன்புக்குரியவரே என்று குறிப்பிட்டு அரவணைக்கும் எமோஜியை பதிவிட்டுள்ளார்.

இந்தமுறையும் த்ரிஷா வாழ்த்துக்களை பதிவிடுவார் என்று எதிர்பார்த்த நிலையில், இன்னும் அவர் பதிவை வெளியிடவில்லை. ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளும் ஜுன் 22ம் தேதி தனது வாழ்த்துக்களை தெரிவித்த நிலையில், இன்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |