இரு ராஜயோகங்களை மொத்தமாக தரும் புதன் பெயர்ச்சி- அடுத்த 4 நாட்களுக்கு டபுள் ஜாக்பாட்
ஜோதிட சாஸ்த்திரங்களின்படி, ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட இடைவேளையில் தன்னுடைய ராசியை மாற்றும்.
இதன்படி, கிரகரங்களின் இளவரசனாக பார்க்கப்படும் புதன் பகவான் சிறப்பு வாய்ந்தவர்களாக பார்க்கப்படுகிறார். இவரின் பெயர்ச்சியால் பலன் பெறுபவர்கள் தான் அதிகம்.
பேச்சு, வணிகம், புத்திசாலித்தனம், தகவல் தொடர்பு ஆகியவற்றிற்கு பொறுப்பானவர்களாக இருக்கும் இவர், தன்னுடைய ராசியை குறிப்பிட்ட கால இடைவெளியில் மாற்றுவார்.
இதன்படி, புதன் பகவான் கடந்த டிசம்பர் 06 ஆம் தேதி விருச்சிக ராசிக்குள் பயணம் செய்தார். இந்த பெயர்ச்சியால் புதன்- சூரியன் இணைந்து புதாதித்ய ராஜயோகத்தை உருவாக்குகிறார்கள். அதே போன்று சுக்கிரன் பெயர்ச்சியால் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாக்குகிறது. இந்த இரண்டு ராஜயோகங்களும் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை கொண்டு வரப்போகிறது.
அந்த வகையில், புதன் பெயர்ச்சியால் உருவாகும் இரண்டு ராஜயோகங்களால் வாழ்க்கையில் முன்னேற்றம் காணும் ராசியினர் யார் யார் என்பதை பதிவில் பார்க்கலாம்.
புதன் பெயர்ச்சியால் கிடைக்கும் அமோக வெற்றி

விருச்சிக ராசியினர்
- விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த இரு ராஜயோகங்கள் காரணமாக சமூகத்தில் வழக்கத்திற்கு மாறாக மதிப்பு அதிகரிக்கும். எந்த வேலை கொடுத்தாலும் செய்து விடலாம் என்ற தன்னம்பிக்கை உருவாகும். நீங்கள் செய்யும் வேலை பிடிக்கவில்லையென்றால் புதிய வேலைகள் கூட முயற்சி செய்யலாம். திருமணமானவர்களுக்கு துணையிடம் இருந்து அன்பு அதிகமாக கிடைக்கும்.
சிம்ம ராசியினர்
- சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த இரு ராஜயோகங்களால் வாழ்க்கையில் பல நல்ல விடயங்கள் அடிக்கடி நடக்கும். உதாரணமாக வீடு, கார், பங்களா வாங்கும் வாய்ப்பு வரும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தினர் முன்னிலையில் நீங்கள் சாதித்தவர் போன்று காட்சிக் கொடுப்பீர்கள். ரியல் எஸ்டேட் தொடர்பான வேலைகளில் நல்ல ஆதாயம் கிடைக்கும்.
மீன ராசியினர்
- மீன ராசியினர் 9 ஆவது வீட்டில் உருவாகியுள்ள புதாதித்ய மற்றும் லட்சுமி யோகங்களால் அதிர்ஷ்டம் காண்பார்கள். வெளிநாட்டு பயணங்கள் அதிகமாக செல்ல வாய்ப்பு உள்ளது. தொழிலில் நீங்கள் நினைத்ததை விட வெற்றி அதிகமாக கிடைக்கும். மாணவர்களுக்கு தேர்வுகள் வரும் சமயத்தில் உங்கள் வீட்டிலுள்ளவர்களுக்கு வாய்ப்பு வரும். முன்னேறும் பாதையை இந்த யோகங்கள் உங்களுக்கு காட்டிக் கொடுக்கும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).