புதன் வக்ர பெயர்ச்சி 2026! இந்த 4 ராசிகளுக்கு தலைவிதி மாறப்போகுது
புதன் வக்ர பெயர்ச்சி இன்னும் சில தினங்களில் நடைபெறும் நிலையில், பணமழை கொட்டும் 4 ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
புதன் வக்ர பெயர்ச்சி
கிரகங்களின் இளவரசர் என்று அழைக்கப்படும் புதன், புத்தி கூர்மை, பேச்சாற்றல், வணிகம் மற்றும் தகவல் தொடர்பின் அதிபதியாகவும் இருக்கின்றார்.
பொதுவாக கிரகங்களின் பெயர்ச்சியை மிக முக்கியமாக ஜோதிடத்தில் பார்க்கப்படுகின்றது. அந்த வகையில் ஜுன் 29 அன்று இரவு 11.05 மணிக்கு புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சியடைகின்றார்.
இந்த பெயர்ச்சியானது ஜுலை 24 அதிகாலை 4.27 மணி வரை நடைபெறுகின்றது. இதனால் சில ராசியினருக்கு கூடுதல் நன்மை கிடைக்குமாம். அந்த ராசியினரைக் குறித்து தெரிந்து கொள்வோம்.

மேஷம்
மேஷ ராசியின் 4-ம் வீட்டில் இருப்பதால் வீடு, குடும்பம் மற்றும் நல்லிணக்கம் இந்த வக்ர பெயர்ச்சி நடக்கிறது. அலுவலகச் சூழல் சாதகமாக மாறும். மேலதிகாரிகளின் பாராட்டும், வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமும் கிடைக்கும். கடந்த கால முதலீடுகளில் இருந்து எதிர்பார்த்த நல்ல லாபம் தேடி வரும். நீண்ட நாள் தனிப்பட்ட மற்றும் தொழில்முறைப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். திருமணமாகாதவர்களுக்கு மனதிற்குப் பிடித்த நபர் அறிமுகமாக வாய்ப்புண்டு. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இந்த காலகட்டத்தில் சுவாரஸ்யமான ஒருவரை சந்திக்கும் வாய்ப்புகள் உள்ளன. அவர்களின் பயணங்கள் இப்போது எதிர்பார்த்த லாபத்தைக் கொடுக்கப்போகிறது.

கடகம்
கடக ராசியினருக்கு இந்த பெயர்ச்சியானது இரட்டிப்பு மகிழ்ச்சியினை அழிப்பதுடன், வருமானம் மற்றும் சேமிப்பு அதிகமாகும்.
நீண்ட நாட்களாக வராமல் இருந்த பரம்பரை சொத்துக்கள் கைக்கு வருவதுடன், குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழலும் நிலவுமாம்.
விலையுயர்ந்த பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவதுடன், ஆரோக்கியம் மேம்படும். கடின உழைப்பிற்கு ஏற்ற பதவி உயர்வு மற்றும் வேலையில் வெற்றியும் கிடைக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசியில் 9ம் வீட்டில் இந்த வக்ர பெயர்ச்சி நிகழும் நிலையில், அசுர வேகத்தில் நிதி நிலைமை வலுப்பெறுமாம். கடன் பிரச்சனை முற்றிலும் முடிவிற்கு வரும்.
வியாபாரிகளுக்கு இந்த காலம் பொற்காலமாக இருக்குமாம். வேலையில் புதிய பொறுப்பு தேடி வருவதுடன், சக ஊழியர்களின் முழு ஆதரவும் கிடைக்கும்.
குடும்பத்தில் பிரச்சனை நீங்கி மனநிறைவு மற்றும் மகிழ்ச்சி, சிறந்த ஆரோக்கியம் மேம்படும்.

மீனம்
மீன ராசியில் 5ம் வீட்டில் புதன் வக்ர பெயர்ச்சி அடையும் நிலையில், படிப்பில் மாணவர்கள் வெற்றிகளையும், சாதனையும் அடைவார்கள்.
வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைப்பதுடன், தனிப்பட்ட வாழ்க்கையிலும், தொழில் இவற்றிலும் நல்லதொரு மாற்றம் கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதுடன், எதிர்பாராத பண வரவினால் நிதி நிலை மேம்படும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |