கிருத்திகை நட்சத்திரத்தில் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு பணமழை உறுதி!
ஜோதிடத்தின் படி, நவகிரகங்களின் ராசி மற்றும் நட்சத்திர மாற்றங்கள் மனிதர்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்தவகையில், தைரியம், வீரியம் மற்றும் துணிச்சலின் கிரகமாக கருதப்படும் செவ்வாய், தற்போது தனது சொந்த ராசியான மேஷத்தில் பயணித்து வருகிறார்.

இந்த நிலையில், ஜூன் 16 இன்று செவ்வாய் கிருத்திகை நட்சத்திரத்திற்குள் நுழைகிறார். சூரியன் ஆதிக்கம் செலுத்தும் இந்த நட்சத்திரத்தில் அவர் ஜூலை 5 வரை இருப்பார்.
செவ்வாய் மற்றும் சூரியன் நட்பு கிரகங்களாக இருப்பதால், இந்த பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு திடீர் முன்னேற்றம், புதிய வாய்ப்புகள் மற்றும் அதிர்ஷ்டத்தை வழங்கப்போகின்றது.
அப்படி குறித்த செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்

செவ்வாயின் நட்சத்திரப் பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் பணியிடத்தில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும்.
பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் புதிய பொறுப்புகள் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன. இதுவரை செய்த கடின உழைப்புக்கான பலன்கள் கிடைக்கத் தொடங்கும்.
உயர் அதிகாரிகளின் ஆதரவும் பாராட்டும் கிடைக்கக்கூடும். வருமானம் உயர்ந்து, நிதி நிலைமை வலுப்பெறும்.
சிம்மம்

செவ்வாயின் நட்சத்திரப் பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களுக்கு ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியும் மனநிறைவும் அதிகரிக்கும்.
உறவினர்களிடையே இருந்த மனக்கசப்புகள் நீங்கி, உறவுகள் வலுப்பெறும். நீண்டகாலமாக சந்தித்து வந்த சிரமங்கள் படிப்படியாக குறையத் தொடங்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.
குடும்ப மற்றும் தாம்பத்ய வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும். நீண்ட நாட்களாக ஒரு முக்கிய விஷயத்தில் முடிவெடுக்க முடியாமல் இருந்தவர்கள், இந்த காலத்தில் சரியான முடிவை எடுக்க வாய்ப்பு கிடைக்கும்.
விருச்சிகம்

செவ்வாயின் நட்சத்திரப் பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்களின் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக நிறைவேறும். நிதி நிலையில் ஏற்றம் உண்டாகும்.
வியாபாரிகளுக்கு லாபகரமான புதிய ஒப்பந்தங்கள் மற்றும் வாய்ப்புகள் கிடைக்கும். நிதி நிலைமை கணிசமாக மேம்படும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகி, பணம் தொடர்பான பிரச்சனைகள் நிவர்த்தியாகும்.
பணியிடத்தில் உங்கள் கருத்துகளுக்கும் முடிவுகளுக்கும் அதிக முக்கியத்துவம் வழங்கப்படும். பொறுப்புகள் அதிகரித்தாலும், சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |