மேஷ ராசியில் அஸ்தமிக்கும் புதன்: வெற்றி வாகை சூடப்போகும் டாப் 3 ராசிகள்!
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் நவகிரகங்களின் நிலையில் ஏற்படுகின்ற மாற்றங்களானது 12 ராசிகளின் வாழ்க்கையிலும் நேரடியாக ஆதிக்கம் செலுத்தும் குறிப்பிடப்படுகின்றது.
அந்தவகையில், கிரகங்களின் இளவரசனாக திகழும் புதன் பகவான் தற்போது மீன ராசியில் பயணித்து வருகின்றார். ஏப்ரல் 30 ஆம் திகதி புதன் பகவான் மேஷ ராசிக்குள் நுழைந்து பயணிக்கவுள்ளார்.

மேஷ ராசிக்குள் நுழைந்த மறுநாளே, அதாவது மே 01 ஆம் திகதி புதன் அந்த ராசியில் அஸ்தமனமாகிய நிலையில் தான் பயணிக்கவுள்ளார்.
குறித்த புதன் அஸ்தமனமானது அனைத்து ராசிகளிலுமே குறிப்பிடத்தக்க சாதக, பாதக மாற்றங்களை ஏற்படுத்தினாலும், தொழில், கல்வி மற்றும் நிதி விடயத்தில் அதிகளவான நன்மைகளை பெயப்போகும் ராசியினர் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கடகம்

கடக ராசியின் 10 ஆவது வீட்டில் புதன் அஸ்தமனமாகவுள்ளதால் இந்த ராசியினரின் தொழில் வாழ்க்கையில் அமோக முன்னேற்றம் உண்டாகும்.
புதன் ஆசியால் மாணவர்களின் கல்வி நிலையில், நேர்மறையான மாற்றம் உண்டாகும். அறிவாற்றல் மற்றும் மன வலிமை அதிகரிக்கும்.
எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணியிடத்தில் நீண்ட காலமாக இருந்துவந்த பிரச்சினைகள் நீங்கும். புதிய மொழில் ஆரம்பிக்க வேண்டும் என நீண்ட காலம் போராடியவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் கைமேல் வரும்.
சிம்மம்

சிம்ம ராசியின் 9 ஆவது வீட்டில் புதன் அஸ்தமனமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு பொருளாதாரத்தில் இதுவரை காலமும் இல்லாத அளவுக்கு ஏற்றம் உண்டாகும்.
தொழில் மற்றும் வியாபார ரீதியில் எடுக்கும் ஒவ்வொரு முயற்ச்சியும் வெற்றியளிக்கும். எதையும் சாதித்துவி்டலாம் என்ற உணர்வு தானாகவே மேலோங்கும்.
தொழிலதிபர்கள் எதிர்பாராத அளவில் லாபத்தை காண்பதோடு, தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்புகளும் கைகூடும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.
மகரம்

மகரத்தின் 4 ஆவது வீட்டில் புதன் அஸ்தமனமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வாழ்வில் பல்வேறு வழிகளிலும் சாதக மாற்றங்கள் உருவாகும்.
கலைத் துறையில் இருப்பவர்கள் எதிர்பார அளவுக்கு நிதி நிலையில் வளர்ச்சி காண்பார்கள். இவர்கள் இருக்கும் இடத்தை தேடி செல்வ செழிப்பு வரும்.
வெளிநாட்டு வேலைக்கு முயற்ச்சிப்பவர்களுக்கு நல்ல செய்தி வரும். நண்பர்கள் அல்லது வங்கியிடமிருந்து பெரிய தொகை கடன் உதவி கிடைப்பதற்கான வாய்ப்பு காணப்படுகின்றது. பணவரவுக்கு இந்த காலகட்டத்தில் பஞ்சமே இருக்காது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |