இளம்பெண்ணை கட்டிலில் கட்டிவைத்து அரங்கேறிய கொடுமை: இறுதியில் நடந்தது என்ன?
பெண் ஒருவரை கட்டிலில் கட்டி வைத்து சாலையில் இழுத்துச் சென்ற நபர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் புலந்த்சஹரில் ஒரு 37 வயதான பெண்ணொருவர் தன்னுடைய கணவர் மற்றும் ஏழு குழந்தைகளோடு வசித்துவந்த நிலையில், திடீரென ஆக்ரோஷமாக மாறி அனைவரையும் துன்புறுத்தி வருகின்றார் என்று வீட்டார்கள் ஒதுக்கி வைத்துள்ளனர்.
அதன் பிறகு அந்த பெண்ணுக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் ஏற்பட்ட தகராறில் அந்த குடும்பத்து ஆண்கள் அந்த பெண்ணை ஒரு கட்டிலில் கட்டி ஒரு வயல் வெளிப்பக்கம் இழுத்து சென்று கொடுமைப்படுத்தனர்.
அதை பார்த்த அந்த ஊர் மக்கள் அந்த பெண்ணை அவர்களிடமிருந்து காப்பற்றியதோடு, காவல்நிலையத்தில் உறவினர்கள் மீது புகார் கொடுத்துள்ளனர்.
ஆனால் புகாரை ஏற்றுக்கொள்ளாத பொலிசார் காணொளி வைரலானதால், புகாரை எடுத்துக்கொண்டு வழக்கு பதிவு செய்துள்ளனர்.
விசாரணையில், அந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், அவர் தங்களது வீட்டிலுள்ளோரை கொடுமைப்படுத்தியதால் அவரை எங்காவது கொண்டு போய் விட்டு விட இப்படி செய்ததாக குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
ஆனால் பொலிஸார் அவர்களின் சமாதானத்தை ஏற்காமல் அவர்களின் மீது நடவடிக்கை எடுத்து இருவரை கைது செய்துள்ளனர்.
you may like this...