Menopause Symptoms: 45 வயதை கடந்து விட்டீர்களா? மெனோபாஸ் அறிகுறிகள் இதோ
பெண்கள் 45 வயதைக் கடந்துவிட்டால், அடுத்து சந்திக்கும் பிரச்சனை என்னவெனில், மெனோபாஸ் ஆகும். இதற்கான அறிகுறிகள் என்ன என்பதை இந்த பதிவில் தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
மெனோபாஸ்
மெனோபாஸ் காலத்தில் பெண்கள் உடல் ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு பெண்ணிற்கும் குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு மாதவிடாய் நிற்கும்.
பொதுவாக பெண்களுக்கு 40 முதல் 50 வயதில் மாதவிடாய் சுழற்சிகள் முற்றிலுமாக நின்றுவிடுவதையே மெனோபாஸ் என்று அழைக்கப்படுகிறது.
சில பெண்களுக்கு அவர்களின் உடலைப் பொறுத்து 50 முதல் 55 வயதிலும் ஏற்படுகின்றது. இந்தக் காலக்கட்டத்தில் பெண்கள் உடல்நலத்தில் கூடுதலாக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஆயுர் வேதத்தினை பொறுத்தவரை பெண்கள் உடலியல் செயல்பாடுகள் குழந்தை பருவம், நடுவயது அல்லது இளம் பருவம், முதுமைப் பருவம் ஆகும். இதில் குழந்தை பருவத்தில் கபமும், இளம் பருவத்தில் பித்தமும், முதுமைப் பருவத்தில் வாயு எனப்படும் வாதமும் ஏற்படும்.
மாதவிடாய் நிற்பது என்பது இளம் பருவநிலை மாறி முதுமைக்குச் செல்வதைக் குறிக்கிறது, அதாவது பித்த நிலையிலிருந்து வாத நிலைக்கு மாறுவதாகும்.
மரபியல் தொடர்பு உண்டா?
மெனோபாஸ் என்பது மரபியலுடன் தொடர்புடையதாகவும் பார்க்கப்படுகின்றது. அதாவது பெண்ணின் அம்மா, சித்தி, பெரியம்மா, பாட்டி போன்றவர்களுக்கு எந்த வயதில் நின்று போகின்றது என்பதைப் பொருத்தே வருகின்றது.
இதனை கருத்தில் கொண்டு நாம் மெனோபாஸ் வயதை நெருங்கிவிட்டோமா? என்பதை அறிந்து கொள்ள முடியும். அதாவது அம்மா, சித்தி இவர்களுக்கு 50 வயதில் மெனோபாஸ் ஆகியிருந்தால், அதே வயதில் தான் உங்களுக்கும் முடியுமாம்.
மெனோபாஸின் வெவ்வேறு கட்டங்கள்?
இந்த மெனோபாஸில் ப்ரீமெனோபாஸ், மெனோபாஸ் மற்றும் போஸ்ட்மெனோபாஸ் என மூன்று கட்டங்கள் உள்ளன.
அதாவது மாதவிடாய் நின்று போதலுக்கு முந்தைய கட்டம், மாதவிடாய் நின்றுபோதல், மாதவிடாய் நின்று போதலுக்கு பிந்தைய கட்டம்.
ஒரு வருட காலத்திற்கு மாதவிடாய் வரவில்லை என்ற நிலைக்கு பிறகு வரும் கட்டத்தை போஸ்ட் மெனோபாஸ் என்கிறோம்.
பொதுவாக இந்த கட்டத்தில் தனிநபர்களை பொறுத்து அறிகுறிகள் மாறுபடுகின்றன.
மாதவிடாய் நின்று போவதை எவ்வாறு கண்டறிவது?
மெனோபாஸ் சமயத்தில் முறையற்ற மாதவிடாய் ஏற்படுகிறது. சில சமயங்களில் ஒரே மாதத்தில் இரண்டு முறை மாதவிடாய் வரும். இம்மாதிரியான அறிகுறிகளை உடனடியாக கவனத்தில் கொள்ள வேண்டும்.
மாதவிடாய் நின்றுப் போகும் சமயத்தில் முறையற்ற மாதவிடாய் அதீத ரத்தப் போக்கு போன்ற அறிகுறிகள் ஆறு மாதங்கள் முதல் ஒரு வருட காலம் வரை இருக்கும்.
மருத்துவர்களிடம் சென்று அதிக ரத்தப்போக்கை உடனடியாக சரி செய்ய வேண்டும். ஏனென்றால் அதிக ரத்தப்போக்கால் ரத்த சோகை, இதய நோய் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.
தேவைப்படும் சூழல்களில் ஹார்மோன் அளவுகளை பரிசோதனை செய்துவிட்டு அதற்கேற்றாற்போல சிகிச்சைகளும் வழங்கப்படும்.
அறிகுறிகள் என்ன?
பெரும்பாலான பெண்கள் மாதவிடாய் காலத்தில் சூடான ஃப்ளாஷ் அறிகுறி எதிர்கொள்கின்றனர். இதனால் இந்த காலகட்டத்தில் பெண்கள் மூட்டு வலி அல்லது தசை வலியை அனுபவிக்கலாம்.
தலைச்சுற்றல் அல்லது இதயத்துடிப்பு போன்றவை இதயம் தொடர்பான நிலைமைகள் என்றாலும் ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவது உடல் நெகிழ்வான தமனிகளை தக்கவைத்துகொள்வதை தடுக்கலாம். இது இரத்த ஓட்டத்தை பாதிக்கலாம். சீரான உணவுப்பழக்கம், புகைப்பிடித்தலை தவிர்ப்பது இதய நோய் அபாயத்தை குறைக்கலாம்.
ஈஸ்ட்ரோஜன் உற்பத்தி குறைவது எலும்புகளில் கால்சியத்தின் அளவை பாதிக்கும். இவை தான் ஆஸ்டியோபொராசிஸ் என்னும் நிலையை உண்டு செய்கிறது. இது உடலில் இடுப்பு, முதுகுத்தண்டு மற்றும் பிற எலும்பு முறிவுகளுக்கு காரணமாக இருக்கலாம். பெண்கள் பால் பொருள்கள், அடர் இலை கீரைகள் போன்ற கால்சியம் நிறைந்த உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
உங்கள் ஹார்மோன் அளவுகளில் ஏற்படும் மாற்றங்கள் எடை அதிகரிக்க காரணமாக இருக்கலாம். உங்கள் எடையை கட்டுப்படுத்த உதவும் சீரான உணவை பராமரிப்பதில் கவனம் செலுத்தவும். அதிக எடையுடன் இருப்பது மெனோபாஸ் அறிகுறிகளுடன் இதய நோய் மற்றும் நீரிழிவு நோய் அபாயத்தையும் அதிகரிக்கும்.
ஹாட் ஃப்ளாஷ் என்பது உடலில் வெப்பநிலை உயரும் பிரச்சனை ஆகும். இவை உடலின் மேல்பகுதியை பாதிப்பதுடன், தோல் சிவப்பு நிறமாகவும் மாறுகின்றது. இந்த வெப்பத்தின் காரணமாக வியர்வை, இதயத்துடிப்பு மற்றும் தலைச்சுற்றல் போன்ற உணர்வு ஏற்படும். இவை தினமும் அல்லது ஒரு நாளைக்கு பல முறை கூட வரலாம்.
leptospirosis symptoms: மனித குலத்துக்கு எமனாகும் பாக்டீரியா! லெப்டோஸ்பைரோசிஸ் அறிகுறிகள் எப்படியிருக்கும்?
எவ்வாறு எதிர்கொள்வது?
புரோட்டீன் நிறைந்த உணவுகளை சாப்பிட்டு வருவதால், வளர்சிதை மாற்றத்தினை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும். மேலும் நீண்ட நேரம் உங்களை முழுமையாக உணரவும் வைக்கின்றது.
மெனோபாஸ் காலத்தில் ஏற்படும் தசை இழப்பை போக்க வலிமை பயிற்சியில் ஈடுபடுங்கள். இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுவது மட்டுமல்லாமல், எலும்பு ஆரோக்கியத்தையும் ஆதரிக்கிறது.
இந்த கால கட்டத்தில் வெள்ளை ரொட்டி மற்றும் சர்க்கரை உணவுகள் போன்ற சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும். இதனால் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், கொழுப்புச் சேமிப்பைக் குறைக்கவும் உதவுகிறது.
செரிமானத்தை அதிகரிக்கும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். ஏனெனில் நார்ச்சத்து நிறைந்த உணவுகள் உங்களை முழுமையாக உணர வைப்பதால், அதிகமாக சாப்பிடும் வாய்ப்பு குறைகின்றது. எனவே மெனோபாஸ் காலத்தில் வளர்சிதை மாற்றம் குறையும் போது இது மிகவும் முக்கியமானது.
மெனோபாஸ் காலத்தில் ஹார்மோன் மாற்றங்களானது, வீக்கம் போன்ற அறிகுறிகளுக்கு வழிவகுக்கும் என்பதால், உடம்பை எப்பொழுதும் நீரேற்றமாக வைத்துக் கொள்ள வேண்டும். போதுமான அளவு தண்ணீர் குடிப்பது நச்சுகளை வெளியேற்றவும், வீக்கத்தை குறைக்கவும் செய்கின்றது.
ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக மெனோபாஸ் காலத்தில் தூக்கக் கலக்கம் பொதுவானது, மேலும் தூக்கமின்மை பசி ஹார்மோன்களை சீர்குலைப்பதன் மூலமும், மன அழுத்த அளவை அதிகரிப்பதன் மூலமும் எடை அதிகரிக்க வழிவகுக்கிறது. ஆகவே சரியான தூக்கத்தை உறுதி செய்வதால், ஹார்மோன்களை சீராக்கவும், எடை குறைப்பிற்கும் உதவுகின்றது.
மன அழுத்தமானது கார்டிசோல் அளவை அதிகரிப்பதன் மூலம், வயிற்றுப் பகுதியைச் சுற்றி, எடை அதிகரிக்க வழிவகுக்கும். எனவே மெனோபாஸ் காலத்தில் ஆரோக்கியமான எடையை பராமரிக்க மன அழுத்தத்தை நிர்வகிப்பது மிகவும் முக்கியமானது.
ஆல்கஹால் கூடுதல் கலோரிகளைச் சேர்ப்பதுடன், தூக்கத்தையும் சீர்குலைத்து மோசமாக்குகின்றது. மேலும் உடல் எடை குறைப்பதிலும் சிரமம் ஏற்படும். ஆகவே ஆல்கஹால் எடுத்துக் கொள்வதை தவிர்க்கவும்.
அவ்வப்போது உண்ணாவிரதம் மேற்கொள்வது இன்சுலின் அளவைக் கட்டுப்படுத்துவதுடன், கொழுப்பு குறையவும் ஊக்குவிக்கின்றது. வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும் உதவுவதுடன், மெனோபாஸ் காலத்தில் நன்மை அளிக்கவும் செய்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |