'உங்களை விட உங்க அண்ணாவை தான் பிடிக்கும்' நடிகருக்கு நோஸ்கட் கொடுத்த மீனா!
தமிழ் சினிமாவில் 40ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்த மீனாவிற்கு அண்மையில் விழா எடுத்துக் கொண்டாடினார்கள். இந்த விழாவில் மீனா குறித்து பிரபு தேவா பேச அவருக்கு நோஸ்கட் செய்து பேசிய விடயம் தற்போது வைரலாகி வருகின்றது.
நடிகை மீனா
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 90களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் தான் மீனா.
இவர் தமிழ் மொழியை தாண்டி கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற மொழி படங்களிலும் நடித்து மிகவும் பிரபலமானவர்.
இவர் குழந்தை நட்சத்திரமாக ரஜினியுடன் நடித்த இவர் ஒரு கட்டத்தில் ஹீரோயினாக மாறி ரஜினிக்கு ஜோடியாகவும் நடித்து விட்டார். சினிமாவில் பிரபலமான இவர் 2009ஆம் ஆண்டு பெங்களூருவைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர்கள் இருவருக்கும் பிறந்தவர் தான் விஜய் நடித்த தெறி படத்தில் விஜய்யின் மகளாக அறிமுகமான நைனிகா.
இவ்வாறான நிலையில் கடந்த வருடம் ஜூன் மாதம் 28ஆம் திகதி நடிகை மீனாவின் கணவன் வித்தியாசாகர் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து விட்டார்.
இந்நிலையில் இவர் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப்போகிறார் என பல வதந்திகள் கிளம்பினாலும் மீனா இது குறித்து இன்னும் வாய்த்திறக்கவில்லை.
அண்ணாவைத் தான் பிடிக்கும்
கணவன் மறைவிற்கு பிறகு மீனா தற்போது சினிமா பக்கம் வரத் தொடங்கியதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இவ்வாறான நிலையில் தமிழ்சினிமாவில் 40ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார் மீனா.
இதற்காக விழா எடுத்து கொண்டாடியிருக்கிறார்கள். இந்த விழாவில் பிரபு தேவா சில கருத்துக்களை கூறி இருந்தார். மீனாவை ரொம்ப பிடிக்கும்.
அதாவது “மீனா ரொம்ப அழகா இருப்பாங்க..நாம அந்த காலத்தில் எப்பிடி எப்பிடியோ இருப்போம்..” எனக் கூறியதற்கு உடனே மீனா சிரித்துக்கொண்டே “உங்களை விட உங்க அண்ணாவை தான் பிடிக்கும்” என நோஸ்கட் செய்யும் வகையில் கூறிவிட்டார்.
இந்த விடயம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.