வயிற்றிலுள்ள ஏகப்பட்ட பிரச்சினைகளுக்கு மருந்தாகும் பேரிக்காய்! தினமும் சாப்பிடலாமா?
பொதுவாக அதிகமான மக்கள் விரும்பி சாப்பிடும் பழங்களில் பேரிக்காயும் ஒன்று.
இந்த பழம் பெரிதாக விலையில்லாத காரணத்தினால் அதிகமாக வாங்கி வீடுகளில் சேமித்து கொள்ளலாம்.
இதனால் இதை `ஏழைகளின் ஆப்பிள்' என்று அழைக்கிறார்கள்.
பேரிக்காயில் நீர்ச்சத்து அதிகமுள்ளதால் இங்கிலாந்து மக்கள், பேரிக்காயை `கோடைக்கால தண்ணீர்குடம்' என்றும் கூறுகிறார்கள்.
அந்த வகையில் பேரிக்காயின் நன்மைகள் குறித்து தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
பேரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை
1. பேரிக்காயில் கால்சியம், பாஸ்பரஸ் கணிசமாக உள்ளதால் எலும்பு வளர்ச்சியை ஊக்கப்படுத்தும். இதன் காரணமாக சிறுவர்களுக்கு அதிகமாக கொடுக்கலாம்.
2. பேரிக்காயை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைத்து ரத்த ஓட்டத்தை சீராக்கும்.
3. எடை குறைப்பிற்கு முயற்சிப்பவர்கள் இந்த பழத்தை தாரளமாக சாப்பிடலாம்.
4. ரத்தத்தில் ஆக்சிஜன் அதிகம் கிடைக்கச் செய்யும். அஜீரணக் கோளாறுகளை அகற்றி, நன்கு பசியை உண்டாக்கும்.
5. குடல் புற்றுநோய் திசுக்கள் பிரச்சினையுள்ளவர்கள் இந்த பழத்தை தினமும் எடுத்து கொள்ளலாம்.
6. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
7. தினமும் பேரிக்காய் சாப்பிட்டால் சோர்வு, மன இறுக்கம் நீங்கி புத்துணர்வு தரும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |