உடம்பில் கால்சியம் சத்து குறைந்தால் என்னென்ன பிரச்சினைகள் ஏற்படும்னு தெரியுமா?
கால்சியம் உடலுக்கு தேவையான முக்கியமான ஊட்டச்சத்தாகும். இவை எலும்புகளையும், பற்களையும் வலிமையுடனும், ஆரோக்கியத்துடனும் வைத்துக் கொள்ளும்.
இதர ஊட்டச் சத்துக்களைப் போல் கால்சியமும் நமக்கு மிகவும் தேவை. இவற்றை தினமும் உணவில் கட்டாயம் சாப்பிட வேண்டும். ஆண்களை விட பெண்களுக்கு கால்சியம் சத்து அதிக அளவில் தேவைப்படுகிறது.
கால்சியம் உடலில் குறைவாக இருந்தால் பல் மற்றும் எலும்பு பிரச்சனைகள் வரும். அதையும் மீறி வேறு சில பிரச்சனைகளையும் நாம் சந்திக்கக் கூடும். இதைப் பற்றி நாம் இக்கட்டுரையில் விரிவாக பார்ப்போம்.
கால்சியம் குறைபாட்டிற்கான காரணங்கள்
அதீத உடற்பயிற்சி
அதிகளவில் குளிர்பானங்கள் குடித்தல்
மாதவிடாய் நிறுத்தம்
அதிகளவில் தேநீர், காபி குடித்தல்
அதிக ஆல்கஹால் உட்கொள்ளுதல்
கால்சியம் குறைபாட்டின் அறிகுறிகள்
சோர்வு, கருவுறாமை, தூக்கமின்மை, தோல் வறட்சி, கண்புரை, நெஞ்சு வலி, அதிக கொழுப்பு, கருச்சிதைவு, கையில் உணர்வின்மை, ஈறு நோய்கள், பசியின்மை, உயர் இரத்த அழுத்தம் ஏற்படும்.
கால்சியம் குறைபாட்டை போக்க சில வழிமுறைகள்
கால்சியம் நிறைந்த உணவுகளை உட்கொள்ளுதல் வேண்டும்.
சீஸ், பாலாடைக்கட்டிகள் மற்றும், பால் பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
வைட்டமின் டி யை சூரிய ஒளியிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.
உணவில் உப்பை குறைத்துக் கொள்ளுங்கள். புகைபிடிக்கும் பழக்கத்தை விட்டு விட வேண்டும்.
கீரை, ப்ரோக்கோலி, அத்தி, உலர் பழங்கள், பச்சை காய்கறிகளை சாப்பிடலாம்.
காரணம் எதுவாக இருந்தாலும், உடலில் கால்சியம் பற்றாக்குறைக்கான அறிகுறிகள் தென்படும்போது உடனடியாக மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.