சாஸ்த்திரம்: வீட்டிற்கு கருப்பு எறும்பு வருவது அதிர்ஷ்டமா? பலருக்கும் இருக்கும் சந்தேகம்
பொதுவாக வீட்டிற்கு சில உயிரினங்கள் வருவது சுபம் மற்றும் அசுபம் என இரண்டு பலன்கள் உள்ளன.
வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் கருப்பு எறும்பு வருவது மிகவும் சுபமாக பார்க்கப்படுகின்றது.
கருப்பு எறும்பு வீட்டிற்கு வருவது லட்சுமி தேவியின் வருகை என முன்னோர்கள் நம்புகிறார்கள்.
அந்த வகையில் கருப்பு எறும்பு வீட்டிற்கு வருவதால் கிடைக்கும் சாஸ்த்திர பலன்கள் என்னென்ன என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
கருப்பு எறும்பு வீட்டிற்கு வருவது ஏன்?
1. வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் கருப்பு எறும்புகளின் கூட்டம் இருந்தால் அதனை நாம் கலைக்கவோ அல்லது அழிக்கவோ கூடாது. ஏனெனின் இப்படி கருப்பு எறும்பு வீட்டிற்குள் படையெடுப்பது செல்வத்தின் அதிபதியான லக்ஷ்மி தேவியின் வருகையைக் குறிக்கிறது.
2. வழக்கத்திற்கு மாறாக வீட்டில் கருப்பு எறும்புகள் தென்படுவதால் அது பொருள் வசதிகளில் வளர்ச்சி ஏற்படுத்து என சொல்லப்படுகின்றது. அத்துடன் வீட்டிற்கு மகிழ்ச்சியையும், செழிப்பையும் ஏற்படுத்தும்.
3. பொதுவாக வீடுகளில் அரிசிக்கு அருகில் மற்ற உயிரினங்கள் வராதப்படி அடைத்து விடுவார்கள். அப்படி இருந்தும் அரிசி வைத்திருக்கும் இடத்திற்கு பக்கத்தில் கருப்பு எறும்பு இருந்தால் அது உங்களின் வீட்டிற்கு செல்வம் மற்றும் செழிப்பைக் கொண்டு வரப்போகின்றது என பொருட்படுகின்றது.
4. நகைப் பெட்டியில் அல்லது நாம் நகைகளை வைக்கும் இடத்தில் பக்கத்தில் சில சமயங்களில் கருப்பு எறும்புகளை நாம் காணலாம். இது விலைமதிப்பான தங்கப் பொருள் மேலும் வீட்டில் சேர்ப்பதற்கான அறிகுறியாக பார்க்கப்படுகின்றது.
5. கருப்பு எறும்பு தெற்கு திசையிலிருந்து வந்தால் அது எதிர்காலத்தில் செழிப்பை ஏற்படுத்தும். அதே சமயம் வடக்கு திசையிலிருந்து வந்தால் அது மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும்.
6. வாஸ்து படி, கருப்பு எறும்பு கிழக்கு திசையிலிருந்து வந்தால் கெட்ட செய்தி வரப்போகின்றது என்று அர்த்தம். அதே போல் மேற்கு திசையில் வெளியேறினால் அது பயணத்தின் அறிகுறியாகவும் பார்க்கப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |