ப்ளாக் பெர்ரி ரசம்... மாஸ்டர் செஃப்-யில் பிரபலமான ரெசிபி
Black Berry Rasam: பிளாக்பெர்ரி பழத்தினைக் கொண்டு வித்தியாசமான ரசம் எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
பொதுவாக பூண்டு, மிளகு கொண்டு செய்யப்படும் ரசம் உடலுக்கு அதிக ஆரோக்கியத்தினை அளிக்கின்றது. நோய் எதிர்ப்பு சக்தியை அளிப்பதுடன், சளி, இருமல் பிரச்சனைக்கும் நிரந்தர தீர்வு அளிக்கின்றது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கட்டாயம் எடுத்துக் கொள்ளவேண்டிய உணவு வகையில் ஒன்றாகும். ஆனால் சிலருக்கு ரசம் என்றாலே முகம் சுழிக்கும் நிலை உள்ளது. ஆனால் குழந்தைகளுக்கு சாதத்தினை ரசத்தில் நன்றாக பிசைந்து கொடுத்தால் சாப்பிட்டு விடுவார்கள்.
இதுவரை ரசம் புளி, தக்காளி இவற்றினை புளிப்பிற்காக சேர்த்து செய்வதை தான் வழக்கமாக வைத்திருப்போம். ஆனால் பழங்களில் மிகவும் சத்தான பிளாக் பெர்ரி பழத்தினைக் கொண்டு ரசம் எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
பிளாக் பெர்ரி - 10 (மசித்துக் கொள்ளவும்)
மிளகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
பூண்டு - 5 பல்
பச்சை மிளகாய் - 1
எண்ணெய் - தேவையான அளவு
கறிவேப்பிலை - 1 கொத்து
பட்டை வத்தல் - 1
காயப்பொடி - சிறிதளவு
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 2 கப்

செய்முறை
முதலில் ப்ளாக்பெர்ரி நன்றாக கழுவி சிறிய பவுல் ஒன்றில் சேர்த்து நன்றாக மசித்துக் கொள்ளவும். பின்பு மிளகு சீரகம், மிளகாய், பூண்டு இவற்றினை கொரகொரப்பாக தட்டி எடுத்துக் கொள்ளவும்.
அடுப்பில் கடாய் ஒன்றினை வைத்து அதில் எண்ணெய் சேர்த்து கடுகு, பட்டை வத்தல், கறிவேப்பிலை, காயப்பொடி சேர்த்து தாளிக்கவும். பின்பு தட்டி வைத்திருக்கும் பூண்டு, மிளகை சேர்த்து நன்றாக வதக்கவும்.

இதனுடன் மசித்து வைத்துள்ள ப்ளாக்பெர்ரியை சேர்த்து நன்றாக கிளறவும். பின்பு தேவையான தண்ணீர் சேர்த்து 7 நிமிடம் குறைவான தீயில் வைக்கவும்.
பின்பு அடுப்பினை அணைத்த பின்பு எலுமிச்சை சாறு சேர்த்து, கடைசியாக கொத்தமல்லி இலை இவற்றினையும் சேர்த்து இறக்கினால் சுவையான ப்ளாக்பெர்ரி ரசம் தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |