ஆந்திரா ஸ்டைல் அட்டகாசமான கத்திரிக்காய் வறுவல்... ஒருமுறை செய்து பாருங்க
Andhra Style Brinjal Varuval: வீட்டில் உள்ள கத்திரிக்காயை ஆந்திரா ஸ்டைல் வறுவல் எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வொம்.
பொதுவாக வீட்டில் கத்திரிக்காய் கூட்டு, பொரியல் என்று வைத்தால் குழந்தைகள் அதிகமாக விரும்பி சாப்பிடுவதில்லை. சில பெரியவர்களே கத்திரிக்காய் சாப்பிடுவதை தவிர்த்து வருகின்றனர்.
சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம் என அனைத்திற்கும் அட்டகாசமான சைட்டிஷ்ஷாக இருக்கும் கத்திரிக்காய் வறுவல். அவ்வாறான கத்திரிக்காய் வறுவலை ஆந்திரா ஸ்டைலில் செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்
கால் கிலோ கத்தரிக்காய்
2 ஸ்பூன் எண்ணெய்
3 பச்சை மிளகாய்கள்
1 கொத்து கறிவேப்பிலை
1 ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது
தேவையான அளவு உப்பு
1 ஸ்பூன் எலுமிச்சை சாறு
3 ஸ்பூன் நிலக்கடலை
மசாலாப் பொருட்கள்
½ ஸ்பூன் கடுகு
½ ஸ்பூன் சீரகம்
⅛ ஸ்பூன் மஞ்சள் தூள்
1 ஸ்பூன் மிளகாய் தூள்
½ ஸ்பூன் கரம் மசாலா

செய்முறை
பாத்திரம் ஒன்றில் 2 கப் தண்ணீர் ஊற்றி, ¼ தேக்கரண்டி உப்பு சேர்த்து கலக்கி வைக்கவும். கத்திரிக்காயை நறுக்கி உப்பு கலந்த தண்ணீரில் போட்டு வைக்கவும்.
கடாய் ஒன்றில் எண்ணெய் சேர்த்து கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்கவும். இதனுடன் இஞ்சி, பூண்டு விழுது மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
இதனுடன் நறுக்கி வைத்துள்ள கத்திரிக்காய், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 3 நிமிடம் வதக்க வேண்டும். கடாயினை மூடி வைத்து கத்திரிக்காயை வேக வைக்கவும். அவ்வப்போது கிளறிவிட வேண்டும்.

மசாலா பொருட்களை எண்ணெய் சேர்க்காமல் வறுத்து, ஜாரில் பொடியாக அரைத்துக் கொள்ளவும். கத்திரிக்காய் நன்றாக வெந்ததும், அரைத்து வைத்த பொடி, கறிவேப்பிலை, இடித்து வைத்துள்ள நிலக்கடலை ஆகியவற்றினை சேர்த்து வதக்கி இறக்கவும்.
வறுவல் சற்று ஆறியதும் எலுமிச்சை சாறு பிழிந்துவிட்டால் அறுமையான கத்திரிக்காய் வறுவல் தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |