அதிகரிக்கும் கொரோனா... பொது இடத்தில் மாஸ்க் அணிவது கட்டாயம்!
கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரிக்க தொடங்கியதால் மாஸ்க் அணிவதை கட்டாயமாக்கியுள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பாதிப்பின் காரணமாக மக்கள் உயிர் பிழைப்பதே அதிசயம் என்ற நிலையில் இருந்து தற்போது ஓரளவு மீண்டு வந்துள்ளனர்.
கடந்த 3 மாதங்களாக குறைந்து வந்த கோரானா பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரித்த தொடங்கியுள்ளது. இந்த நிலையில், மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாகவும், ஆனால் தமிழகத்தில் பதற்றமான சூழல் இல்லை என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து தமிழகத்தில் முகக் கவசம் அணியாவிட்டால் அபராதம் என்ற முறையே விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், பொது இடங்களுக்கு செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
கொரிய பெண்கள் உதட்டை சிவப்பாக வைத்திருக்கும் ரகசியம் என்ன தெரியுமா? நீங்களே தயாரிக்கலாம்..!
