கொரிய பெண்கள் உதட்டை சிவப்பாக வைத்திருக்கும் ரகசியம் என்ன தெரியுமா? நீங்களே தயாரிக்கலாம்..!
பெண்களின் உதட்டை பற்றி வர்ணிக்கும் போது கோவைப் பழம் போல் செக்கச் சிவந்திருப்பதாக வர்ணிப்பார்கள். அந்த அளவிற்கு பெண்ணின் முக அழகை மேம்படுத்திக் காட்டுவதில் உதடுகளின் பங்கு முக்கியமானது.
ஆனால், இன்றைய காலக்கட்டத்தின் பரபரப்பான வாழ்க்கை முறையில், சரும அழகை பராமரிக்கும் பலரும் உதட்டைப் பற்றி கவலைப்படுவதில்லை, மார்க்கெட்டுகளில் கிடைக்கும் விதவிதமான லிப் பாம் மற்றும் லிப்ஸ்டிக்குகளை வாங்கி பூசிக்கொண்டு உதட்டை கெடுத்துக்கொள்கின்றனர்.
ஆனால், கொரிய பெண்கள் எப்போதுமே தங்களது சரும அழகை பராமரிக்க பாரம்பரிய முறைகளையும் பின்பற்றி வருகிறார்கள். பார்ப்பதற்கு அவர்களது முகம், சருமம் கண்ணாடி போல் பளபளக்கும்.
அவர்கள் உதடுகள் சிவப்பாகவும், ஈரப்பதத்துடனும் காணப்படும். அதற்கு முழு காரணம் அவர்கள் பாரம்பரிய முறையுடன் லேட்டஸ்ட் குறிப்புகளை கலந்து வீட்டிலேயே தயாரிப்பது தான்.
குறிப்பாக கொரிய பெண்கள் தங்களது உதடுகளை வசீகரமாக வைத்திருக்க வீட்டிலேயே உங்கள் பொருட்களை கொண்டு எளிமையான வழிமுறைகளில் தயாரிக்கும் லிப் பாம்களை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.
அந்த வகையில், உங்களுடைய மந்தமான உதடுகளை கொரிய பெண்களின் உதடுகள் போல் சிவப்பாக ஜொலிக்க வைக்க விரும்பினால் இதையெல்லாம் பின்பற்றுங்கள்.
6 மாசம் செம்ம வலி! ரசிகரின் கேள்விக்கு உண்மையை உளறிய நடிகை சமந்தா
செய்ய தேவையான பொருட்கள்
முதலில் லிப் பாம் செய்ய முடிவெடுத்துவிட்டீர்கள் என்றால், கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
நன்றாக மசிக்கப்பட்ட ஸ்ட்ராபெர்ரிகள் - 2 ஜெலட்டின் பவுடர் - 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் லெமன் எசன்ஷியல் ஆயில் - 3 - 4 துளிகள்
செய்முறை விளக்கம்
முதலில் தேங்காய் எண்ணெயை மைக்ரோவேவில் வைத்து சுமார் 30 வினாடிகள் சூடாக்கவும்.
அதோடு நன்றாக மசித்து எடுத்து வைக்கப்பட்ட ஸ்ட்ராபெர்ரிகள் மற்றும் ஜெலட்டின் பவுடரை சேர்த்து கலக்கவும்.
ஜெலட்டின் நன்றாக உருக வேண்டும் எனவே 50 விநாடிகள் வரை சூடாக்கவும். பின்னர், லெமன் எசன்ஷியல் ஆயிலை 3 முதல் 4 துளிகள் வரை சேர்த்து நன்றாக கலக்கவும்.