என்னது... அர்ஜூன் நடித்த இந்தத் திரைப்படம் விஜய்க்காக எழுதியதா? இது தெரியாம போச்சே
தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். அவர் ஆரம்பத்தில் சினிமாவுக்குள் வரும்பொழுது பல கேலிகளையும் கிண்டல்களையும் எதிர்கொண்டுள்ளார்.
ஆனால், அதற்குப் பின் தனது திறமையால் அனைத்தையும் தாண்டி தற்போது வெற்றி நாயகனாக வலம் வருகின்றார்.
அதுமட்டுமில்லாமல் நடனம், ஆக்ஷன், எமோஷனல், காமெடி என எதைக் கொடுத்தாலும் அதில் தனது அடையாளத்தை பதித்து கமர்ஷியல் கிங்காக உயர்ந்தார்.
இந்நிலையில் சுராஜ் இயக்கத்தில் அர்ஜூன் நடிப்பில் வெளியான திரைப்படம் மருதமலை. இந்தப் படம் மிகப்பெரும் வெற்றியை பெற்றது.
image - you tube
குறிப்பாக வடிவேலுவின் காமெடி காட்சிகள் அனைத்தும் பிரமாதம். இந்நிலையில் இந்தத் திரைப்படத்தின் கதை விஜய்க்காக எழுதப்பட்டது என தெரியவந்துள்ளது.
இந்தத் திரைப்படத்தின் கதையை முதலில் விஜய்யிடம் சுராஜ் கூறியிருக்கிறார்.
விஜய் அவர்களுக்கு இந்தக் கதை பிடித்துப்போக படத்திலும் நடிக்க ஒப்புக்கொண்டார்.
ஆனால், அந்த சமயத்தில் வேறு ஒருவருக்கு திரைப்படத்துக்கு கொடுத்த திகதியும் இந்தப் படத்துக்காக ஒதுக்கப்பட வேண்டிய திகதிகளும் முட்டிக்கொண்டதால் படத்திலிருந்து விஜய் விலகியிருக்கின்றார்.
இதை அண்மையில் ஒரு பேட்டியில் சுராஜ் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
image - ott play