கையெடுத்து கும்பிட்ட உமாபதி..! இறுதி வரை அணையாமல் இருந்த சர்வைவர் நெருப்பை பார்த்து அதிர்ந்த அர்ஜூன்
சர்வைவர் நிகழ்ச்சியின் இறுதி நிகழ்ச்சி நேற்று ஒளிபரப்பப்பட்ட நிலையில் அதில் உமாபதிக்கு நடந்த துரோகம் தான் பேசு பொருளாக மாறி இருக்கின்றது.
விஜயலக்மியின் நம்பிக்கை துரோகத்தினால் மனமுடைந்த உமாபதி இறுதி போட்டியில் கூட சிறப்பாக விளையாட வில்லை. அவர் ஜூரியாகி போகும் போது சர்வைவர் வழக்கம் படி அவர்களின் நெருப்பு அனைக்கப்பட வேண்டும்.
உமாபதியின் நெருப்பை தொகுப்பாளர் அர்ஜூன் அனைத்தார்.
பல முறை அர்ஜூன் முயன்றும் நெருப்பு அனைய வில்லை. துரோகம் மனிதர்களுக்கு இடையில் தான் நடக்கும் கடவுளாக வணங்கும் நெருப்புக்கு இல்லை. அந்த போட்டியில் வெற்றி பெறும் தகுதி அவருக்கு இருந்தது.
நெருப்பு அனைய வில்லை என்றதும் உமாபதி நெகிழ்ச்சியில் கையெடுத்து கும்பிட்டார்.
அதன் பின்னரே நெருப்பு அனைந்தது. இந்த அதிசயத்தினை பார்த்த தொகுப்பாளர் அர்ஜூன் ஒரு நிமிடம் ஆச்சரியத்தில் விழிகளை விரித்துள்ளார். இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.