ஸ்டார் ஹொட்டலில் பிச்சைக்காரர்களுக்கு விருது! விஜய் ஆண்டனியின் தரமான செயல்
பிச்சைக்காரன் 2 படத்தின் பிரம்மாண்ட வெற்றியை கொண்டாடும் விதமாக நடிகர் விஜய் ஆண்டனி பிச்சைக்காரர்களுக்கு ஸ்டார் ஹொட்டலில் விருந்து கொடுத்துள்ளார்.
பிச்சைக்காரன் 2
தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்த விஜய் ஆண்டனி தற்போது முழுமையாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகின்றார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான பிச்சைக்காரன் 2 பெரும் வெற்றியை தேடித் தந்துள்ளது.
இப்படத்தில் இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளார். குடும்ப நபர்களை கவரும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள இப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் மழை பொழிந்து வருகின்றது.
குறித்த படம் எதிர்பார்ப்பினை மீறி வெற்றி பெற்றுள்ளதால், விஜய் ஆண்டனி மற்றும் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் காணப்படுகின்றனர். மேலும் படம் வெற்றியை படக்குழுவினரோடே அனைவரும் கொண்டாடுவார்கள்.
ஆனால் விஜய் ஆண்டனி இப்படத்தின் சக்சஸ் பார்ட்டியை பிச்சைக்காரர்களுக்கு உதவும் வகையில் கொண்டாடி வருகின்றார்.சில தினங்களுக்கு முன்பு பிச்சைக்காரர்களுக்கு தேவையான பொருட்களை வழங்கினார்.
இந்நிலையில் தற்போது, 5 ஸ்டார் ஹொட்டலில் 100க்கும் மேற்பட்ட பிச்சைக்காரர்களுக்கு விருந்து வைத்துள்ளார். மேலும் அனைவருக்கும் தனது கையினால் பிரியாணியை பரிமாறியதோடு, அவர்களுக்கு ஐஸ்கிரீம், இனிப்புகளை கொடுத்து பசியாற்றியுள்ளார். இக்காட்சி வைரலாகி வருகின்றது.
#BichagaduEmotionalJourney pic.twitter.com/ZNumFZOCG2
— vijayantony (@vijayantony) May 27, 2023