டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி
வேத ஜோதிடத்தில் கூறப்பட்டது போன்று கிரகங்களில் குறிப்பிட்ட கால இடைவேளையில் தன்னுடைய ராசியை மாற்றும்.
இதன்படி, கிரகங்களின் தளபதியாக பார்க்கப்படும் செவ்வாய் 45 நாட்களுக்கு ஒருமுறை தன்னுடைய ராசியை மாற்றுவார். தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் குருவாக பார்க்கப்படும் செவ்வாய் தற்போது விருச்சக ராசியில் பயணிக்கிறார்.
அடுத்து பிறக்கப்போகும் டிசம்பர் மாதம் முதல் தனுசு ராசியில் பயணிப்பார். ஆண்டின் இறுதியில் தனுசு ராசிக்கு செல்லும் பொழுது 12 ராசிகளில் குறிப்பிட்ட சில ராசியினருக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கவுள்ளார். இழந்த சொத்துக்களும் கைக்கு வந்து சேரும்.
அந்த வகையில், 18 வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் அரிய செவ்வாய் பெயர்ச்சியால் சொகுசு வாழ்க்கையை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என்பதை பதிவில் பார்க்கலாம்.

| விருச்சிக ராசி அன்பர்கள் | விருச்சிக ராசியினருக்கு செவ்வாய் பெயர்ச்சியால் புதிவிதமான தைரியம் வரும். இதனால் அவர்கள் வீரமானவர்கள் போன்று தெரிவார்கள். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எந்தவித நோயும் உங்களுக்கு வராது. திருமணம் நடக்கவில்லை என கவலையா? அப்போ நிச்சயம் உங்களுக்கு இந்த வருடம் இறுதியில் நல்ல செய்தி வரும். |
| மேஷ ராசி அன்பர்கள் | மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சிடையந்த பின்னர் அதிர்ஷ்டங்கள் பல கிடைக்கும். நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும். நீங்கள் செய்யும் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உங்களுடைய குடும்பத்தில் இவ்வளவு நாட்களாக இருந்த பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். அமைதியாக இருந்து சாதிக்கும் சாதனையாளராக மாறவும் வாய்ப்பு உள்ளது. |
| மீன ராசி அன்பர்கள் | மீன ராசியினருக்கு செவ்வாய் பெயர்ச்சியினால் புதிய வேலைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. சமூகத்தில் நல்ல பெயர் உண்டாகும். தனிப்பட்ட வாழ்க்கையில் நீங்கள் சிறகடித்து பறப்பீர்கள். மருத்துவ துறையில் ஆர்வம் உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிகமாக கிடைக்கும். உங்களுடைய வெற்றி உங்களுடைய கையில் உள்ளது. |
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).