மீனத்தில் இணையும் செவ்வாய் - புதன்: இந்த ராசிகளுக்கு பணமழை தான்
ஜோதிட கணிப்புகளில் நவகிரகங்களின் நிலைக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.
காரணம் கிரக நிலைகள், பெயர்ச்சி கிரங்களின் அரிய சேர்க்கையால் உருவாகும் ராஜயோகங்கள் என்பன 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க சாதக, பாதக மாற்றங்களை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகின்றது.
அந்தவகையில், ஏப்ரல் மாதம் ஆற்றல் மிக்க கிரங்களான செவ்வாய் மற்றும் புதன் கிரங்கள் மீன ராசியில் இணையப்போகின்றது.

கிரகங்களின் தளபதியான செவ்வாய் ஏப்ரல் 2 ஆம் திகதி மீன ராசிக்குள் நுழைகின்றார். அதே நேரம் கிரகங்களின் இளவரசனாக அறியப்படும் புதன் ஏப்ரல் 11 ஆம் திகதி மீன ராசிக்கு இடம் பெயர்கின்றார்.
குறித்த செவ்வாய் புதன் 24 மாதங்களின் பின்னர் ஒரே ராசியில் இணைவதால், குறிப்பிட்ட சில அபரிமிதமான நன்மையை பெறப்போகின்றார்கள். அப்படி அதிர்ஷ்டம் பெறும் ராசியினர் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்

ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த செவ்வாய்-புதனின் இந்த சேர்க்கையானது தொழில் விடயத்தில் அபரிமிதமான அதிர்ஷ்டத்தை கொடுக்கப்போகின்றது.
இவர்களுக்கு எதிர்பாரத வகையில் பெரிய தொகை பணம் கைக்கு வரும் வாய்ப்பு காணப்படுகின்றது. புதன் பகவானின் ஆசியால் அறிவாற்றல் அதிகரிக்கும் புதிய திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்பு அமையும்.
குறிப்பாக நிதி ரீதியில் இது மிகவும் சிறப்பான காலகட்டமாக இருக்கும், நீண்ட காலமாக நிலுவையில் இருந்த கடன் பிரச்சினைகளுக்கு முடிவு கிடைக்கும்.
மிதுனம்

மிதுன ராசியினருக்கு இந்த செவ்வாய்- புதன் சேர்க்கையால், தொழில் விடயத்தில் அமோக முன்னேற்றம் ஏற்படும்.
இவர்களுக்கு தெழிலில் இருந்த தடைககள், பணியிடத்தில் சக ஊழியர்களுடன் இருந்துவந்த பிரச்சினைகள் நீங்கும்.புதிய வியாபாரம் ஆரம்பிப்பதற்கான யோகம் காணப்படுகின்றது.
முன்னைய முதலீடுகளில் இருந்து பெருமளில் லாபம் ஈட்டுவதற்கான வாய்ப்பு காணப்படுகின்றது. பணவரவு திருப்திகரமாக இருக்கும். வங்கி இருப்பில் இதுவரையில் இல்லாத அளவுக்கு உயர்வு ஏற்படும்.
தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு, இந்த சேர்க்கையால் தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, தொழில் வாழ்க்கையிலும் சரி தொட்டதெல்லாம் பொன்னாகும் பொற்காலமாக இருக்கும்.
இவர்களின் நிதி நிலையில் என்றும் இல்லாத அளவுக்கு வளர்ச்சி உண்டாகும். புதிய வருமான ஆதாரைங்களை பெறுவதற்கான வழிகள் திறக்கும்.
நீண்ட நாட்களாக பேராடி வந்த பிரச்சினைகளுக்கு வெற்றிகரமாக முடிவு கட்டுவீர்கள். குடும்பத்துடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவத்கு வாய்ப்புகள் உருவாகும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |