இதனால் தான் திருமணம் செய்தேன்.. புகைப்படத்தை வெளியிட்டு உண்மை உளறிய பும்ராவின் மனைவி!
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கும் முன்பு தொலைக்காட்சி தொகுப்பாளினி சஞ்சனா கணேசனுக்கும் கடந்த மாதங்களுக்கு முன்பு திருமணம் கோவாவில் நடைப்பெற்றது. இதனையடுத்து, இந்த அழகிய ஜோடிக்கு கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலர், வாழ்த்துக்களைத் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், பும்ரா - சஞ்சனா கணேசன் ஆகியோர் இன்ஸ்டாவில் மாறி மாறி கமெண்ட் செய்தது, தற்போது நெட்டிசன்களிடையே அதிகம் வைரலாகி வருகிறது. அதில், பழைய புகைப்படத்தை பகிர்ந்த தமிப்பெண் சஞ்சனா வாழ்நாள் முழுவதும் மதிப்புள்ள நினைவுகள் என குறிப்பிட்டிருந்தார்.
இதன்பின்னர், தனது மனைவியின் பதிவில் கமெண்ட் செய்த பும்ரா, 'இந்த புகைப்படத்தை எடுத்தவர் நல்லவர்' என குறிப்பிட்டார். மேலும், இதற்கு பதில் கமெண்ட் செய்த சஞ்சனா கணேசன், 'இதனால் தான் அவரை நான் திருமணம் செய்தேன்' என குறிப்பிட்டுள்ளார். இந்த கமெண்ட் புகைப்படமானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
View this post on Instagram
2ம் ஆண்டு நினைவஞ்சலி(+44) 20 3137 6284UK(+41) 315 282 633Switzerland(+1) 437 887 2534Canada(+33) 182 888 604France(+49) 231 2240 1053Germany(+1) 929 588 7806US(+61) 272 018 726Australialankasri@lankasri.comEmail US