விஜய்யுடன் திருமணமா? திரிஷா அம்மா கொடுத்த ரியாக்ஷன்... அப்போ உண்மை தானா?
சமூக வலைத்தளத்தில் இணையவாசிகள் விஜய் மற்றும் த்ரிஷாவிற்கு திருமணம் என போட்ட போஸ்ட்டுக்கு த்ரிஷாவின் அம்மா கொடுத்த ரியாக்ஷன் தற்போது சமூக வலைத்தள பக்கத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகர் விஜய் மற்றும் த்ரிஷா
சங்கீதா நடிகர் விஜய்யிடமிருந்து விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். தனது கணவருக்கு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு இருக்கிறது என்று அந்த மனுவில் கூறி இருந்தார்.
ஏற்கனவே விஜய் மற்றும் த்ரிஷாவிற்கு இணையத்தில் பல கிசுகிசுக்கள் வந்தன. இதனோடு நடிகை ஒருவருடன் விஜய்க்கு தொடர்பு என்று சங்கீதா மனுவில் கூறியதும் இது பெரும் சர்ச்சையாக பேசப்பட்டது.

இப்படி ஒரு பக்கம் இருக்க விஜய் மற்றும் த்ரிஷா திருமண விழா ஒன்றிற்கு ஒரு நிற ஆடை அணிந்து சென்றனர். இந்த காணொளி இன்னும் சர்ச்சையை பலமாக்கியது.
இதன் பின்னர் பல திரை பிரபலங்கள் நடிகை த்ரிஷாவை விமர்சித்தனர். இதில் பார்த்திபன் த்ரிஷா பற்றி பேசியது இணையத்தில் பெரும் பேசுபொருளானது.
இந்த நிலையில் தற்போது விஜய்யுடன் த்ரிஷாவிற்கு திருமணம் என்ற போஸ்க்கு அவரது அம்மா செய்த ரியாக்ஷன் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

திரிஷா அம்மா ரியாக்ஷன்
இந்த சர்ச்சைக்கு மத்தியில் சிலர் சமூக வலைத்தள பக்கத்தில் விஜய்யும், திரிஷாவும் திருமணம் செய்துகொண்டால் என்ன? என கருத்து பதிவிட்டு அதற்கு ரீல்ஸ் மற்றும் மீம்ஸ் போன்றவற்றை வெளியாக்கி வருகின்றனர்.
இப்படி தான் ரசிகர் ஒருவர் 'விஜய்யும் திரிஷாவும் ஒன்றாக இறங்கும் வீடியோவை பகிர்ந்து அதில், தாலி கட்டுவது உறுதி.. தேதி பின்னர் அறிவிக்கப்படும்' என குறிப்பிட்டிருக்கிறார்.

அந்தப் போஸ்ட்டுக்கு திரிஷாவின் அம்மாவான உமா கிருஷ்ணன் லைக் போட்டிருக்கிறார் என்று ஒரு தகவல் தற்போது புகைப்படம் மூலமாக வெளிப்பட்டு வருகிறது. அப்போ உண்மையாகவே விஜய்க்கும் த்ரிஷாவிற்கும் திருமணமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இன்னும் சிலர் கண்டிப்பாக தெரிந்து லைக் போட்டிருக்கமாட்டார்; தவறுதலாக இது நிகழ்ந்திருக்கும் எனவும் லைக் செய்தவர்கள் பட்டியலில் அவர் பெயரையே காணவில்லையே எனவும் கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.
தற்போது சமூக வலைத்தள பக்கத்தில் இது ஒரு பேசு பொருளாக மாறி உள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |