மீண்டும் விமானநிலையத்தில் எஸ்கேப் ஆன த்ரிஷா... புடவையில் தேவதையாக வெளியான போஸ்ட்
நடிகர் விஜய்யுடன் என்னதான் சர்ச்சையான கருத்துக்கள் வந்தாலும் திரிஷா தனது வேலையப் பார்த்துக்கொண்டு, மிகவும் ஜாலியாக இருந்து வருகின்றார்.
நடிகர் விஜய், த்ரிஷா
பிரபல நடிகரும், அரசியல்கட்சி தலைவருமான நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார்.
இவர் தனது விவாகரத்து புகாரில் விஜய் வேறொரு நடிகையுடன் வாழ்ந்து வருவதாகவும், தன்னை மனதளவில் கஷ்டப்படுத்தியுள்ளதாகவும், அவரது வீட்டில் இருப்பதற்கு தங்களை அனுமதிக்கவில்லை என்று பல குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.

இதற்கு எந்தவொரு பதில் அளிக்காத விஜய் திடீரென திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு நடிகை த்ரிஷாவுடன் வந்து அதிர்ச்சியடைய வைத்தார்.
இந்த காணொளி இணையத்தில் வைரலானதையடுத்து, கட்சியிலும், ரசிகர்கள் மத்தியிலும் பல கேள்விகள் எழுந்த நிலையில், இதற்கு விஜய் மறைமுகமாக பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
திருமண கொண்டாட்டத்தில் த்ரிஷா
விஜய்க்கு ஆதரவாக த்ரிஷாவைக் கலாய்த்து பார்த்திபன் அடுத்தடுத்து காணொளிகளை வெளியிட்டு சர்ச்சை ஏற்பட்டது. இதற்கு மிகவும் கூலாக புகைப்படம் வெளியிட்டு அதனை பதிலாக்கினார்.
சமீபத்தில் த்ரிஷா மும்பை செல்வதற்கு விமானநிலையத்திற்கு வந்த நிலையில், அங்கு விஜய் குறித்து கேட்ட கேள்விகளுக்கு எந்தவொரு பதிலும் அளிக்காமல் எஸ்கேப் ஆகியுள்ளார்.

இந்நிலையில் மும்பையில் திருமணம் ஒன்றில் கலந்து கொண்டு பல புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அடுத்தடுத்து புடவைகளில் தேவதை போன்று இருக்கும் த்ரிஷாவின் புகைப்படம் இணையத்தினை ஆக்கிரமித்துள்ளது.
அதே போன்று நேற்று சென்னை திரும்பிய நிலையில், அப்பொழுதும் செய்தியாளர்களை பார்த்ததும் மிகவும் வேகமாக எஸ்கேப் ஆகியுள்ளார்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |