மேடையில் கண்கலங்கிய மணமகள்- உடனே மணமகன் செய்த நெகிழ்ச்சி செயல்
மேடையில் கண்கலங்கிய மணமகளிடம் மணமகன் செய்த செயல் இணையதளங்களில் வீடியோவாக வெளியாகி வைரலாகி வருகிறது.
மேடையில் கண்கலங்கிய மணமகள்
கல்யாணம் என்பது இரு மனம் சங்கமிக்கும் ஒரு தருணம். அது சிலருக்கு வரமாகவே கிடைத்து விடும். திருமணங்களில் பல வேடிக்கைகளும் நடக்கும். திடீரென்று சண்டைகளும் நிகழும்.
மணமேடையில் நடக்கும் சில சில விஷயங்கள் கூட சமூகவலைத்தளங்களில் வெளியாகி ட்ரெண்டாகி விடும். அதுபோலதான், தற்போது இணையதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், மணமகள் மேடையில் கண்கலங்கி அழுததும், உடனே மணமகன் கண் கலங்கி, மணமகளுக்கு கன்னத்தில் முத்தம் கொடுக்கிறார்.
அத்தருணத்தில் மணமகளிடம், மணமகன் உன்னை நான் கண்கலங்காமல் பார்த்துக்கொள்வேன் என்று ஆறுதல் கூறி அவளை தேற்றி நடனம் ஆட அழைக்கிறார்.
இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டனர்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் அடடே... என்ன அழகு... இப்படிப்பட்ட மணமகன் கிடைக்க அப்பெண் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.