மணமேடையில் மணமகன் செய்த செயல் - அவமானத்தில் கண்கலங்கிய மணப்பெண்!
மணமேடையில் மணமகன் செய்த செயலால், அவமானத்தில் தலைகுனிந்து கண்கலங்கிய மணப்பெண்ணின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அவமானத்தில் கண்கலங்கிய மணப்பெண்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், மணமேடையில் மணமகனும், மணமகளும் மாலை மாற்றிக் கொண்டிருந்தனர். இதன் பிறகு மணமகள் ரசகுலா இனிப்பை எடுத்து மணமகன் வாயில் ஆசையாக ஊட்டி விடுகிறார்.
ஆனால், மணமகன் இனிப்பை எடுத்து மணப்பெண்ணுக்கு ஊட்டி விடாமல், ஒரு இனிப்பை அவரும், இன்னொரு இனிப்பை நண்பருக்கும் ஊட்டி விட்டு சாப்பிட்டார். இதைப் பார்த்த மணப்பெண் சோகத்தில் தலைகுனிந்து கண்கலங்கினார்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் அடேய்... அந்தப் பெண் பாவம்... வெறுப்பேத்த இதுதான் நேரமா.. என்று கண்டனம் தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.