சத்குருவின் கருத்துப்படி: ஒரு பெண்ணிற்கு திருமணம் செய்து வைப்பது சரியானதா?
பெண்கள் குறிப்பிட்ட வயதெல்லையில் திருமணம் செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என சத்குரு குருக்கள் கூறுகின்றார்.
சத்குரு குருக்கள்
பெண்கள் எப்போதும் ஒரு ஆண் வர்க்கத்தை பின்தள்ளி வாழ்கின்றனர். பொருளாதாரம் எத்தனையோ தந்திரங்களைக் கையாளக்கூடும். ஆனால் இது முற்றிலும் தவறானது.
எங்கிருந்தோ சில குடும்பங்களில் மகள் கொண்டுவரும் வருமானம் பறிபோகாமல் இருக்க சில தந்தைகள் பெண் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்கக்கூடும்.
ஆனால் மகளை உடைமை என்று நினைத்த காலம் மாறிவிட்டது. தான் சாவதற்குள், யாரிடமாவது அவளைப் பத்திரமாக ஒப்படைத்துவிட்டுப் போக வேண்டும் என்ற அவசியம் இப்போது இல்லை.
சொல்லப்போனால், ஒரு பெண் யாருடைய உடைமையும் இல்லை. அவள் ஒரு தனி உயிர்.
சுதந்திரமான உயிர். அவளுக்குத் தேவையான கல்வியும், சமூக தளமும் அமைத்துக் கொடுத்தால் போதும். எனவே சரியான வயதில் பெண்கள் திருமணம் செய்ய தேவையில்லை என சத்குரு கூறியுள்ளார். அவர்களை நன்றாக படிக்க வைத்தால் போதும். இவர்களை சுதந்திரப்பறவையாக விடுவது தான் நல்லது.