இந்த ராசியினரை திருமணம் செய்யும் பெண்கள் ரொம்பவே பாவம்... ஏன்னு தெரியமா?
பொதுவாக அனைவருமே தங்கள் மனதுக்கு பிடித்தவர்கள் தங்களின் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டும் எனவும் தங்கள் சொல்வதை கேட்க வேண்டும் எனவும் நினைப்பது மிகவும் சாதாரணமான விடயம் தான்.
ஆனால் அவ்வாறான ஒரு துணை கிடைப்பது தான் அசாத்தியமானது. மனதுக்கு பிடித்தவரை உங்களுக்கு ஏற்றவாறு மாற்றுவது சுலபமான விடயம் கிடையாது.
அந்த வகையில் ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட சில ராசியை சேர்ந்த ஆண்கள் மிகவும் பிடிவாத குணம் கொண்டவர்களாக இருக்கின்றனர்.
இதனால் இவர்களை திருமணம் செய்யும் பெண்கள் வாழ்வில் மிகவம் கடினமான சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டிய நிலை காணப்படுகின்றது.
அப்படிப்பட்ட ஆண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசியில் பிறந்தவர்கள் மிகவும் உறுதியான மனநிலை உடையவர்களாக இருப்பார்கள். இவர்களின் இயல்பை மாற்றுவது மிகவும் கடினமான விடயமாகும்.
அதனால் இவர்கள் திருமண பந்தத்தில் இணையும் போது மற்றவர்களுக்காக தங்களை மாற்றிக்கொள்வது சவாலான விடயமாகவே இருக்கின்றது.
சிம்மம்
இந்த ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே மிகவும் பிடிவாத குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். பொதுவாகவே, இவர்கள் தங்கள் துணையின் மீது அதிக அன்பு வைத்திருப்பார்கள்.
இருப்பினும் காதல் விடயத்திலும் கூட தங்களின் பிடிவாத குணத்தை விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.அதனால் இவர்களை திருமணம் செய்பவர்கள் மிகுந்த கஷ்டத்துக்கு உள்ளாக நேரிடும்.
விருச்சிகம்
விரச்சிக ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே தங்களின் கருத்துக்கு அனைவரும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என நினைப்பார்கள்.
அதனால் இவர்கள் துணையின் விருப்பத்துக்கும் கருத்துக்களுக்கும் ஒருபோதும் முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |