எந்த மாதத்தில் பிறந்தால்... எந்தெந்த திகதிகள் துரதிஷ்டம்னு தெரியுமா?
எண் கணித சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் திகதிக்கும் அவருடைய எதிர்காலத்திற்கும் மிக நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது.
அந்த வகையில் பிறந்த மாதத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட சில திகதிகள் ஒருவருக்கு அதிர்ஷ்டம் கொடுப்பதை போன்றே சில திகதிகள் துரதிர்ஷ்டமாகவும் அமையும் என எண் கணித ஜோதிடத்தில் குறிப்பிடப்படுகின்றது.
அப்படி எந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு எந்த திகதிகள் துரதிஷ்டமாக அமையும் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ஜனவரி
ஜனவரி மாதம் புதிய வி்டயங்களை ஆரம்பிக்கும் மங்களம் நிறைந்ததாக பார்க்கப்படுகின்றது. இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு 4,13 ஆகிய திகதிகள் துரதிர்ஷ்டமாக கருதப்படுகிறது. இந்த நாட்களில் முக்கியமான விடயங்கள் தொடர்பில் முடிவெடுக்காமல் இருப்பது சிறந்தது.
பிப்ரவரி
பிப்ரவரி மாதம் காதலின் மாதம் என அனைவராலும் கொண்டாடப்படுகின்றது. இந்த மாதம் பிறந்தவர்களுக்கு 29 ஆம் திகதி அசுப பலன்களையே கொடுக்கும். நெட்டாண்டுகளில் மாத்திரமே பிப்ரவரி 29 வந்தாலும் அந்த நாள் இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு அசுபமானதாக பார்க்கப்படுகின்றது.
மார்ச்
மார்ச் மாதம் வசந்த காலத்தின் தொடக்கம் என்பதால் மிகவும் மகிழ்ச்சியான மாதமாக கருதப்படுகின்றது. இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு 15ஆம் திகதி அசுபமாக கருதப்படுகின்றது.
ஏப்ரல்
ஏப்ரல் மாதம் பிறந்தவர்களுக்கு 1ஆம் திகதி துரதிர்ஷ்டமாக பார்க்கப்படுகின்றது. இந்த நாட்களில் முக்கியமான விடயங்களை ஆரம்பிப்பதை தவிர்த்துக்கொள்வது சிறந்தது.
மே
மாதம் கோடைக்காலம் தொடங்கும் என்பதால் அந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு 5 மற்றும் 20 ஆம் திகதிகள் அசுப பலன்களை கொடுக்கும். இந்த நாட்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.
ஜூன்
ஜூன் மாதம் பிரகாசத்தின் மாதமாக அறியப்படுகின்றது. இந்த மாதத்தில் 6ஆம் திகதி துரதிஷ்டமாக கருதப்படுகிறது. 6என்ற நாளில் உள்ள மூடநம்பிக்கை காரணமாகவும் இந்த நாள் அசுபமானதாக கருதப்படுகின்றது.
ஜூலை
ஜூலை மாதத்தில் பிறந்தவர்களுக்கு 7 மற்றும் 27 ஆம் திகதிகள் துரதிர்ஷ்டமாக இருக்கும். இந்த நாட்களில் விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்புகளும் இருப்பதால் கவனமாக இருக்க வேண்டும்.
ஆகஸ்ட்
ஆகஸ்ட் மாதம் பிறந்தவர்களுக்கு 8 மற்றும் 24ஆம் திகதிகள் துரதிர்ஷ்டமாக அமையும். இந்த நாட்களில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது அவசியம்.
செப்டம்பர்
செப்டம்பர் மாதம் பிறந்தவர்கள் எப்போதும் 9ஆம் திகதி எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த நாள் இவர்களுக்கு அசுபமானதாக கருதப்படுகின்றது.
அக்டோபர்
அக்டோபர் மாதம் பிறந்தவர்கள் என்றால் உங்களுக்கு 13ஆம் திகதி துரதிர்ஷ்டம் கொடுப்பதாக அமையும்.
நவம்பர்
நவம்பர் மாதம் பிறந்தவர்கள் 5 ஆம் திகதிகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
டிசம்பர்
டிசம்பர் மாதம் பிறந்தவர்கள் 25 ஆம் திகதி மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த நாள் உலகம் முழுவதும் நத்தார் பண்டிகை கொண்டாடப்பட்டாலும் இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு இது அசுபமான நாளாகவே கருதப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |