திருமண விழாவில் நடனமாடிய இளைஞர் பரிதாப பலி! காரணம் என்ன?
திருமண விழா ஒன்றில் நடனமாடிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
நடனமாடிய இளைஞர்
கடந்த சில மாதங்களாகவே இளைஞர்களின் மரணம் அதிகமாகவே இருந்து வருகின்றது. அதிலும் நன்றாக இருந்து கொண்டிருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டு பலரும் உயிரிழந்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை கோயம்பேடு பகுதியில் திருமண விழா ஒன்று நண்பர்களோடு சேர்ந்து கல்லூரி மாணவர் ஒருவர் நடனமாடிக் கொண்டிருந்தார்
இந்நிலையில் திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், கீழே சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த மாணவர் சத்யசாய் ரெட்டி என்றும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. இவர் தனியார் பொறியியல் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வந்ததும் தெரியவந்துள்ளது.
மாரடைப்பு ஏற்பட காரணம் என்ன?
எந்தவொரு செயலையும் பதற்றமின்றி, மனஅழுத்தமின்றி செய்ய பழகிக்கொண்டாலே இதயத்துக்கு நல்லது. மனஅழுத்தத்தின் விளைவாக உயரும் ரத்தஅழுத்தம் மாரடைப்புக்கு கம்பளம் விரிப்பது போலத்தான்.
மவுனத்தை கடைபிடித்து, நிதானமாக செயல்பட்டால் மனஅழுத்தம் இன்றி வாழலாம். ரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
மூலைக்கு மூலை துரித உணவு கடைகள் அணிவகுத்து நிற்கும் இந்தக்காலத்தில், சமச்சீரான உணவுப் பழக்கத்தை நம்மில் பலரும் முற்றிலும் மறந்துவிட்டோம்.
குறிப்பாக இளைஞர்களும், சிறுவர் சிறுமிகளும் 'நவநாகரிக உணவு' என்ற பெயரில் வரும் உணவுகளை சாப்பிடவே அதிகம் விரும்புகிறார்கள்.
இதனால் உடலில் கொழுப்பு அதிகமாகச் சேர்ந்து மாரடைப்பு ஏற்பட காரணமாகிறது. உடல் பருமனும், தொடர்ந்து சேரும் கொழுப்பும் மாரடைப்பை ஏற்படுத்தலாம்.