ரஜினி கூறிய இரகசியத்தை சமூக வலைத்தளங்களில் அம்பலமாக்கிய எதிர்நீச்சல் குணசேகரன்! கொந்தளிக்கும் ரசிகர்கள்
ரஜினிகாந் நடிக்க வருவதற்கு முன்னர் என்ன செய்து கொண்டிருந்தார் என்பதனை நடிகர் மாரிமுத்து ஓபனாக கூறியுள்ளார்.
சினிமா பற்று
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கும் 'எதிர்நீச்சல்' சீரியலில் குணசேகரனாக நடித்து பிரபல்யமானவர் தான் நடிகர் மாரிமுத்து.
இவர் வெள்ளத்திரையில் பல இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றினார். பின்னர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
தற்போது சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சமீபக்காலமாக தன்னுடைய சினிமா வாழ்க்கை குறித்து பல பேட்டிகளில் அனுபவங்களை பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான,“ பரியேறும் பெருமாள்..” என்ற திரைப்படம் அவரின் உண்மைக்கதை என்ற கூற்றை முன் வைத்துள்ளார்.
பின்னர், கதிரை படப்பிடிப்பின் போது வெறும் காலோடு மாரி செல்வராஜ் ஓடவிட்டது துவக்கம் முதல் நாயகனை படாது பாடு படுத்தியதாக வரை கூறியுள்ளார்.
ரஜினி முதலில் எந்த கதாபாத்திரத்தில் நடித்தார் தெரியுமா?
இதனை தொடர்ந்து நடிகர் சூப்பர் ஸ்டார் பற்றி ஒரு தகவலை பகிர்ந்துள்ளார். “ஜெயிலர்” திரைப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்து வருவதால் இந்த கேள்வி அங்கு கேட்கப்பட்டது. ரஜினிகாந்த் ஒரு பஸ் நடத்துனர் என்று அனைவருக்கும் தெரியும்.
ஆரம்பகாலத்தில் மேடை நாடகம் ஒன்றில் பீஷ்மர் கதாபாத்திரத்தில் நடிக்க இருந்த ஒருவர் வராத காரணத்தினால் ரஜினி அவருக்கு பதிலாக அந்த கதாபாத்திரத்தில் நடித்தார்.
இந்த நாடகத்தில் ரஜினியின் உண்மையான ஸ்டைல் வெளிப்பட்டது. அப்போது தான் அங்கிருந்தவர்கள் ரஜினியை ஆரவாரப்படுத்தினார்கள்.
அத்துடன் ரஜினிகாந்த் நடிப்பின் மீது கொண்டுள்ள தீராத ஆசையால் நடத்துனராக இருந்த போது அண்ணனின் உதவியுடன் நடிப்பு பள்ளியில் முறையாக பயிற்சி பெற்று நடிகராக மாறினார்.” என்றும் கூறியுள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்த நிலையில்,“ சீரியல் போன்று குணசேகரனின் வாய் தான் அவருக்க எமன்..” என ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |