மகனை குறித்து மனவேதனை பட்ட மாரிமுத்து... வெளியான கடைசி படத்தின் காணொளி
சீரியலில் கம்பீரமாக இருந்த நடிகர் மாரிமுத்து மாரடைப்பினால் உயிரிழந்த நிலையில், உயிர் பிரியும் முன்பு நடந்த விடயங்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நடிகர் மாரிமுத்து
கடந்த 2008ஆம் ஆண்டில் கண்ணும் கண்ணும் என்ற திரைப்படத்தை இயக்கிய இவர், சுமார் 6 வருடங்கள் கழித்து விமல், பிரசன்னா, ஓவியா, அனன்யா, இனியா உள்ளிட்ட நட்சித்திரங்களை வைத்து புலிவால் என்ற திரைப்படத்தையும் இயக்கினார்.
அதற்கு முன்பு, இயக்குநர்கள் மணிரத்னம், சீமான், எஸ்.ஜே. சூர்யா, வசந்த் ஆகியோரிடமும் பணியாற்றியுள்ளார். தற்போது இவரை மூலை முடுக்கெல்லாம் கொண்டு சேர்த்தது எதிர்நீச்சல் சீரியல் தான்.
மீம்ஸ் கிரியேட்டர் முதல் ஆண் மற்றும் பெண் ரசிகர்கள் என ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தினை தனது நடிப்பினால் கவர்ந்தவர். இவரது முக பாவனை, தோரணை, ஏ... இந்தாம்மா... என்ற பேச்சு யாராலும் மறக்கமுடியாது.
கடைசி படத்தின் Sneak Peek
இயக்குனர், நடிகர் என்ப பல பன்முகங்களை கொண்ட இவர் சமீபத்தில் மாரடைப்பினால் உயிரிழந்த நிலையில், பிரபலங்கள் ரசிகர்கள் தங்களது ஆறுதலை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மாரிமுத்து கடைசியாக ரெட் சாண்டல் வுட் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை குரு ராமானுஜம் இயக்கியுள்ளார்.
இப்படத்தில் கே.ஜி.அப் பட வில்லன் ராமச்சந்திர ராஜு, எம்.ஸ் பாஸ்கர், கணேஷ் எனப் பல பிரபலங்கள் நடித்துள்ளனர். தற்போது ரெட் சாண்டல் வுட் படத்தின் Sneak Peek வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |