விஜயின் அப்பா நடிக்கும் சீரியலில் நடிக்க இருந்தவர் இவரா? இதென்ன புது டுவிஸ்டா இருக்கு
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய வரும் “கிழக்கு வாசல்..” என்ற சீரியலில் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு முன்னாள் நடிக்கவிருந்தவர் எதிர்நீச்சல் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
சின்னத்திரை
தற்போது சினிமா விட சின்னத்திரை தான் முன்னணியில் இருக்கின்றது. இதனால் சினிமா பிரபலங்கள் பலர் சின்னத்திரையில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.
அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியில் டிஆர்பியில் கலக்கி வரும் சீரியல் என்றால் அது எதிர்நீச்சல் தான்.
இந்த சீரியலை இயக்குநர் திருச்செல்வம் இயக்கி வருகிறார். பெண்களின் சுதந்திரம் வீடுகளில் எப்படி இருக்கின்றது என்பதனை காட்டு கதையாக நகர்ந்து கொண்டிருக்கின்றது.
மாரிமுத்துவிற்கு பதிலாக நடிப்பவரா எஸ்.ஏ.சி
இந்த நிலையில் எதிர்நீச்சல் சீரியல் என்றாலே அது குணசேகரன் தான். இந்த கதாபாத்திரத்திற்கு இளைஞர்கள் மத்தியிலும் பலத்த வரவேற்பு இருக்கின்றது.
இதனை தொடர்ந்து நடிகை ராதிகா தயாரிப்பில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள சீரியல் தான் கிழக்கு வாசல். இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் விஜயின் தந்தை நடிக்கிறார்.
இந்த கதாபாத்திரத்திற்கு முதலில் மாரிமுத்துவை தான் முடிவு செய்தார்களாம். பின்னர் அவருக்கு நேரம் இல்லாத காரணத்தால் தான் இவருக்கும் பதிலாக எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்து வருகிறாராம். இதனை மாரிமுத்து அவர்கள் சமீபத்தில் ஒரு பேட்டியில் வெளிப்படையாக கூறியுள்ளார்.
மாரிமுத்து இந்த சீரியலில் நடித்திருந்தால் பாசமான நேர்மையான ஒரு அப்பாவாக பார்த்திருக்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |