சின்னத்திரை பிரபலங்கள் வீட்டில் அரங்கேறிய சோகம்...
சின்னத்திரை நடிகர்களால் ராஜ்கமல், லதா ராவ் தம்பதியினரின் வீட்டில் திருட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது.
சின்னத்திரை நட்சத்திர ஜோடிகள்
சின்னத்திரை நடிகர்களான ராஜ்கமல் லதா ராவ் பல சீரியல்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமாகி வருகின்றனர். இந்த ஜோடிகள் பிரபல நடன நிகழ்ச்சியான ஜோடி நம்பர் 1ல் பங்கேற்ற போது காதல் ஏற்பட்டுள்ளது.
பின்பு திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு, லாரா, ராகா என்று இரண்டு குழந்தைகள் உள்ளனர். சென்னை மதுரவாயல் பகுதியில் வீடு ஒன்றினை வாங்கி அவ்வப்போது படப்பிடிப்புக்கு விடுவது வழக்கமாக வைத்திருந்தனர்.
இதனால் அங்கு வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களும் இருந்துள்ளது. வீட்டில் இரண்டு வாசல்கள் உள்ள நிலையில் கடந்த 7ம் தேதி பின்பக்க வாசலின் பூட்டை உடைத்த யாரோ 65 இன்ச் விலை உயர்ந்த தொலைக்காட்சியினை தூக்கிச் சென்றுள்ளனர்.
குறித்த தம்பதிகள் இதுகுறித்து பொலிசாரிடம் புகார் அளித்துள்ள நிலையில், தீவிர விசாரணையும் மேறற்கொள்ளப்பட்டு வருகின்றது. அவ்வப்போது இன்ஸ்டாவில் ரீல்ஸ்களை வெளியிட்டும் ரசிகர்களை கவர்ந்து வந்தனர்.
இவர்கள் வீட்டில் மட்டுமின்றி மற்றொருவரின் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றும் திருட்டு போயுள்ளதாகவும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க பொலிசார் அறிவுறித்தி வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |